அல்-கொய்தாவுடன் இந்திய வைர வியாபாரிகள் தொடர்பு
டெல்லி:
இந்தியாவில் உள்ள சில வைர நகை வியாபாரிகளுக்கும் ஒசாமா பின் லேடனின் அல்-கொய்தா அமைப்புக்கும்தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.
சர்வதே வைரக் கடத்தல் மூலம் அல்கொய்தாவுக்கு ஏராளமான பணம் கிடைக்க இந்த வியாபாரிகள்உதவியுள்ளனர்.
இது குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகளும் வருமானவரித் துறை அதிகாரிகளும் ஆரம்ப கட்டவிசாரணையைத் தொடங்கியுள்ளனர். டெல்லி, மும்பை, ஜெய்ப்பூர், சூரத் நகரில் உள்ள பல வைர வியாபாரிகளின்சர்வதேச தொடர்புகள் குறித்து விசாரணை தொடங்கியுள்ளது.
ஆனால், எந்தெந்த வியாபாரிகள் குறி வைக்கப்பட்டுள்ளனர் என்பது மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. கடந்தஆண்டும் இந்த ஆண்டு துவக்கத்திலும் பல இந்திய வைர வியாபாரிகளுக்கும் மிக அதிகமான ஆர்டர்கள் வந்தன.இவை வழக்கத்தைவிட அதிகமானவை.
இந்த வைர வியாபாரிகள் மூலமாக பல கோடி மதிப்புள்ள வைரங்கள் தீவிரவாதிகளுக்கு இடையே பரிமாறிக்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
நியூயார்க் தாக்குதலுக்குப் பின்னர் சர்வதேச அளவில் அல்-கொய்தா தீவிரவாதிகளின் 100 மில்லியன் டாலர்மதிப்பு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுவிட்டன. இதனால் வைரக் கடத்தல் மூலம் தீவிரவாதிகள் பணத்தைபரிமாறிக் கொள்வது தெரியவந்துள்ளது.
சர்வதேச அளவில் அல்-கொய்தா அமைப்பு வைரம், தங்கம் மூலம் பணம் பட்டுவாடா செய்ய ஆரம்பித்துள்ளதைஅமெரிக்காவும் கண்டுபிடித்துள்ளது. இந்தத் தீவிரவாதிகள் இப்போது இன்டர்நெட் மூலம் தான் உலகளவில்தகவல்களைப் பரிமாறி வருகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications