சங்கராச்சாரியார் நாளை டெல்லி பயணம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

அயோத்தி விவகாரம் குறித்து விவாதிக்க காஞ்சி காமகோடி பீடத்தின் தலைவர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்நாளை டெல்லி வருகிறார்.

கடந்த மார்ச் மாதம் அயோத்தி விவகாரம் பூதாகரமாக வெடித்தபோது காஞ்சி சங்கராச்சாரியாரின் உதவியைபிரதமர் வாஜ்பாய் கோரினார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் சங்கராச்சாரியாரை நேரில்சந்தித்து இந்த விவகாரத்தில் அமைதியை ஏற்படுத்துமாறு பிரதமரின் சார்பில் கோரிக்கை விடுத்தார்.

இதைத் தொடர்ந்து டெல்லி சென்ற சங்கராச்சாரியார் பிரதமருடன் பேசிவிட்டு இஸ்லாமிய சட்ட வாரியத்தலைவர்கள், இந்து மதத் துறவிகளுடன் பேச்சு நடத்தினார்.

பின்னர் ராமஜென்ம பூமி அறக்கட்டளையுடனும் பேசினார். அயோத்தி விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பைஏற்பதாக அறக்கட்டளையிடமும் விஸ்வ ஹிந்து பரிஷத்திடமும் எழுதி வாங்கினார்.

நீதிமன்றத் தீர்ப்பு வரும் முன் அயோத்தியில் பிரச்சனைக்குள்ளாகாத இடத்தில் கோவிலைக் கட்ட அனுமதிக்குமாறுஇஸ்லாமிய சட்ட வாரியத்திடம் கூறினார். அவர்கள் அதை கொள்கை அளவில் ஏற்றனர். முழு அளவில்விவாதித்து முடிவை அறிவிப்பதாகக் கூறினார்.

பிரச்சனைக்குரிய இடம் குறித்து நீதிமன்றம் எடுக்கும் முடிவை இரு மதத்தினரும் ஏற்க வேண்டும் என்றுசங்கராச்சாரியார் கூறியதை வி.எச்.பியும் ஏற்றது.

மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்ட அந்தப் பேச்சுவார்த்தையை நாளை முதல் மீண்டும் தொடங்குகிறார்சங்கராச்சியார்.

இந் நிலையில் தான் கோவில் விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க மாட்டோம் என வி.எச்.பி. பல்டிஅடித்துள்ளது.

அயோத்தி பிரச்சனை தீர வேண்டுமானால் வி.எச்.பி., பா.ஜ.க., அரசியல்வாதிகள் ஆகியோர் முதலில் அந்தவிவகாரத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என சங்கராச்ாரியார் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+