அரசியல் அதலெடிக்ஸ்: அங்கிருந்து இங்கே... இங்கிருந்து அங்கே
சென்னை - பாண்டிச்சேரி:
மதிமுகவைச் சேர்ந்த பல நிர்வாகிகளும், தொண்டர்களும் இன்று திமுகவில் இணைந்தனர். அதே போலபாண்டிச்சேரியில் திமுகவைச் சேர்ந்த 500 பேர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
திமுகவிலிருந்து பிரிந்து மதிமுகவை வைகோ உருவாக்கியபோது மாநிலம் முழுவதும் கட்சியின் முக்கியநிர்வாகிகள் அவருடன் சென்றனர். ஆயிரக்கணக்கான தொண்டர்களும் வைகோவுடன் இணைந்தனர்.
ஆனால், சமீபகாலமாக மதிமுக தொண்டர்கள் மீண்டும் திமுகவுக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளனர்.
சென்னையில் இன்று தென் சென்னை மாவட்டச் செயலாளர் பழனி, மாவட்ட பொருளாளர் மணியன் உள்ளிட்டநிர்வாகிகளும் 500 மதிமுக தொண்டர்களும் மீண்டும் திமுகவில் இணைந்தனர்.
இந்த இணைப்பு நிகழ்ச்சி திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில்நடந்தது. திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து அவருக்கு சால்வை, மாலைகள் அணிவித்து இவர்கள் மீண்டும்கட்சியில் சேர்ந்தனர். அப்போது ஸ்டாலினும் உடனிருந்தார்.
திமுகவிலிருந்து காங்கிரஸ்:
இந் நிலையில் பாண்டிச்சேரியில் நெல்லித்தோப்பு பகுதியைச் சேர்ந்த 500 திமுகவினர் அக் கட்சியில் இருந்து விலகிகாங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர். அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர்கள் திமுகவை கடுமையாகத் தாக்கிப்பேசினர்.












Click it and Unblock the Notifications