ஜெ. நாளை தஞ்சாவூர் பயணம்: புதுப் பொழிவு பெறும் சாலைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக முதல்வர் ஜெயலலிதா நாளை தஞ்சாவூர் செல்கிறார்.

அங்கு கட்டப்பட்டுள்ள தென்னக பண்பாட்டு மையத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைக்கிறார்.

இதற்காக அவர் ஹெலிகாப்டர் மூலம் நாளை பிற்பகல் தஞ்சாவூர் புறப்படுகிறார். குந்தலை நாச்சியார் கல்லூரியின்மைதானத்தில் இந்த ஹெலிகாப்டர் தரையிறங்கும்.

ஜெயலலிதாவின் வருகையையொட்டி தஞ்சாவூர் முழுவதும் அதிமுகவினர் பெரும் வரவேற்பு ஏற்படுகளைசெய்துள்ளனர். அவரது காருக்கு தடை ஏற்படாமல் இருக்க சாலையில் உள்ள ஸ்பீட் பிரேக்கர்களை எல்லாம்பொதுப் பணித்துறையினர் இடித்து வருகின்றனர்.

அவர் செல்லும் சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. சாலையொரங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுவருகின்றன.

காவிரியில் தண்ணீர் கிடைக்கச் செய்ய ஜெயலலிதா உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி கருப்புக் கொடிகாட்ட சில அமைப்புகள் திட்டமிட்டுள்ளாகத் தெரிகிறது. இதையடுத்து அப்படி ஏதும் சம்பவம் நடந்துவிடாமல்தடுக்க ஜெயலலிதா செல்லும் பாதை முழுவதும் 10 அடிக்கு ஒரு போலீஸார் நிறுத்தப்படவுள்ளனர்.

காவிரி பாசனப் பகுதிகளில் உள்ள சூழ்நிலை குறித்து தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர் மாவட்டகலெக்டர்களுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தவுள்ளார். இக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர்சுகவனேஸ்வரர், பாசனத்துறை, விவசாயத்துறை, வருவாய்த்துறை செயலாளர்களும் இக் கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.

இக் கூட்டத்துக்குப் பின்னர் விவசாயிகளுக்கு சில உதவித் திட்டங்களை ஜெயலலிதா அறிவிப்பார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. கடன் வட்டி தள்ளுபடி போன்ற அறிவிப்புகளை ஜெயலலிதா வெளியிட வாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+