இலங்கையில் தமிழர்கள்- முஸ்லீம்கள் மோதல்
கொழும்பு:
இலங்கையின் திரிகோணமலைப் பகுதியில் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இதையடுத்து வன்முறையை அடக்க ராணுவம் அழைக்கப்பட்டது.
புலிகளின் அரசியல் பிரிவினர் மீதும், அரசியல் அலுவலகம மீதும் தொடர்ந்து தாக்குதல் நடந்து வந்தது. இந்தத்தாக்குதலுக்கு ஒசாமா விங் என்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்தத் தாக்குதலைக்கண்டித்து இன்று பல தமிழ் அமைப்புகளின் சார்பில் பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த பந்த்தில் வன்முறை வெடித்தது.
வடகிழக்குப் பகுதி மாவட்டமான திரிகோணமலையில் முட்டூரில் தமிழர்களும் முஸ்லீம்களும் கல்வீச்சில்ஈடுபட்டனர். இரு வழிபாட்டுத் தலங்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்தச் சண்டையில் பல கடைகளும்சேதமடைந்தன.
இதையடுத்து ராணுவம் வரவழைக்கப்பட்டது. அவர்கள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.
அங்கு சுமார் 50 ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நிலைமையை நேரில் கண்டறிய நார்வே தூதுக் குழுவினர் அங்கு விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications