ரவுடிகள் பட்டியலில் பழ. கருப்பைய்யா: மரியாதையை கெடுத்துக் கொள்ளும் போலீஸ்
காரைக்குடி:
பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், மிகச் சிறந்த கட்டுரையாளரும், தமிழ் பற்றாளரும், காந்தீயசிந்தனைவாதியுமான பழ. கருப்பைய்யாவின் பெயரை ரவுடிகள் பட்டியலில் சேர்த்து தமிழக காவல்துறை தனதுமரியாதையை தானே கெடுத்துக் கொண்டுள்ளது.
காரைக்குடி நகரின் குடிநீர் தேவை தொடர்பாக அரசை எதிர்த்து பலமுறை போராடியவர் கருப்பைய்யா. வெறும்அறிக்கைளோடு இல்லாமல் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தியவர் இவர். போராட்டம் தொடர்பாக இவர் மீதுகாரைக்குடி போலீசார் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
ஆனால், அவரை வழக்கில் இருந்து விடுவித்த நீதிமன்றம், அவர் மீது பொய் வழக்கு போட்டதற்காககாவல்துறையைக் கண்டித்தது.
இந் நிலையில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் கருப்பைய்யா. இதையடுத்து அவரைப் பழிவாங்கபோலீசார் திட்டமிட்டனர்.
இதையடுத்து இவரது பெயரை ரவுடிப் பட்டியலில் சேர்த்துள்ளது காவல்துறை.
இதன்மூலம் காவல்துறையின் பெயர் தான் நாறியிருக்கிறேதே தவிர பழ.கருப்பைய்யாவின் பெயர் மக்கள்மத்தியில் கெட்டுவிடாது என்பதை காக்கிகள் உணர்வது நல்லது.
அதிமுக மீது இளங்கோவன் புகார்:
குடிநீர் பிரச்சனைக்காக அரசை எதிர்த்துப் போராடியதாலும், காங்கிரஸ் கட்சியில் இணைந்ததாலும் தான் அவரைரவுடிகள் பட்டியலில் அதிமுகவினர் சேர்க்க வைத்துள்ளனர் என தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன்கூறியுள்ளார்.
அவரை ரவுடிப் பட்டியலில் சேர்த்து காரைக்குடி மக்களை காவல்துறை கேவலப்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளஅவர் இதை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாக கூறியுள்ளார்.
இந்தக் கேவலமான செயலைச் செய்த போலீசாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்இளங்கோவன்.












Click it and Unblock the Notifications