கராத்தே மேயரானதை எதிர்த்த வழக்கு: நாளை விசாரணை
சென்னை:
கராத்தே தியாகராஜனை மேயராக்கியதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மீதான விசாரணை நாளைக்குஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை மேயர் பதவியை காலியாக வைக்கச் சொல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் அந்தப் பொறுப்பில்கராத்தே தியாகராஜனை நியமித்திருப்பதை எதிர்த்து வழக்கறிஞர் விஜயன் உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன்ரெட்டி, நீதிபதி முருகேசன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் அதை நாளைக்கு ஒத்தி வைத்தது.
மேயர் பதவிக்கு தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவுப்படி அந்தப்பதவியை காலியாக வைத்திருக்க வேண்டும். ஆனால், துணை மேயரை இந்தப் பதவியில் அமர்த்திவிட்டார்கள்.அவரை பதவி நீக்கம் செய்து, நீதிமன்ற அவமதிப்பு செய்த தமிழக அரசைக் கண்டிக்க வேண்டும் என்று விஜயன்தனது மனுவில் கூறியுள்ளார்.
கராத்தே பேட்டி:
தான் மேயராக பொறுப்பேற்றதில் எந்தத் தவறுமில்லை என கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.
மேயராகப் பொறுப்பேற்ற அவர் இன்று மாநகராட்சியில் முதன்முறையாக பொது மக்களைச் சந்தித்து மனுக்களைவாங்கினார். இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்,
மேயர் பதவி காலியாக இருக்கும்போது துணை மேயர் அந்தப் பொறுப்பில் இருப்பது சட்டப்படியாகவும்மரபுப்படியும் தவறில்லை. திமுக ஆட்சியிலேயே இதற்கு முன் உதாரணம் உள்ளது.
திருச்சியில் மேயர் மறைந்தபோது துணை மேயரைத் தான் அவர்கள் மேயர் பொறுப்பில் அமர வைத்தனர்.அப்போது மேயரின் அறையை துணை மேயர் பயன்படுத்தினார். இதை நாங்கள் செய்தால் தவறா?
ஸ்டாலின் மேயராக இருந்தபோது பல திட்டங்களை வாயளவில் சொல்லிவிட்டு எதையும் நிறைவேற்றவில்லை.அந்தத் திட்டங்களை நிறைவேற்றிக் காட்டுவோம்.
சென்னையில் ரூ. 75 கோடி செலவில் சாலைகள் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படும். வரும் ஆகஸ்டில் இந்தப்பணி தொடங்கும்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications