வண்டலூர் மிருகக் காட்சி சாலையில் புலிகளுக்கு நோய் தாக்குதல்
சென்னை:
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஒரு புலி தொற்று நோய் காரணமாக உயிரிழந்துள்ளது.
மேலும் இரு புலிகளுக்கும் இந்த நோய் பரவியுள்ளதால் இந்த வனப் பூங்காவில் உள்ள அனைத்துவிலங்குகளுக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
சர்க்கஸ்களில் அடைக்கப்பட்டு சித்ரவதைக்குள்ளான 15 சிங்கங்கள், 8 புலிகளை மிருக வதைத் தடுப்புஅமைப்பினரும் வனத்துறையினரும் மீட்டு இந்த பூங்காவில் சேர்த்தனர்.
அவை சர்க்கசில் இருந்தபோது தொற்று நோயால் தாக்கப்பட்டிருந்தன. இதில் ஒரு புலி சமீபத்தில் உயிரிழந்தது.இதையடுத்து பிற புலிகள் மற்றும் சிங்கங்களுக்கு மருத்துவ சோதனை நடந்தது. அப்போது மேலும் 2 புலிகள்நோயால் தாக்கப்பட்டிப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவை தனியே பிரிக்கப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்டுள்ளன. இந்த நோய் பிறவிலங்குகளுக்கும் பரவி விடாமல் தடுக்க அனைத்து விலங்குகளுக்கும் தடுப்பூசி போட வண்டலூர் பூங்கா முடிவுசெய்துள்ளதாக அதன் இயக்குனர் தியாகி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications