காவிரி பிரச்சனை: இன்று அவசரமாகக் கூடுகிறது தமிழக அமைச்சரவை
சென்னை:
காவிரி பிரச்சனை தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து இன்று கூடவுள்ள தமிழகஅமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
வழக்கமாக ஜூன் 12ம் தேதி திறந்து விடப்பட்டிருக்க வேண்டிய மேட்டூ"ர் அணை, இந்த ஆண்டு நீரில்லாததால்இன்னும் அணையிலிருந்து நீர் திறந்து விடப்படவில்லை. இதனால் குறுவை சாகுபடி மேற்கொள்ள வேண்டியகாவிரி டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தமிழகத்திற்குத் தர வேண்டிய நீரை உடனடியாகக் காவிரியில் திறந்து விட வேண்டும் என்றுதமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான அரசியல் கட்சிகள் கர்நாடக அரசை வலியுறுத்தின.
ஆனால் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீர் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது என்று தமிழக அரசுக்குகர்நாடக முதல்வர் கிருஷ்ணா கடிதம் அனுப்பினார். மேலும் நீர் தரப் போவதில்லை என்றும் கர்நாடக அரசுகூறிவிட்டது.
தமிழக அரசோ கர்நாடக அரசைக் கண்டிக்காத காவிரி நதி நீர் ஆணையத்தைப் புறக்கணிக்கப் போவதாகஅறிவித்து விட்டது. மேலும் இப்பிரச்சனை குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் தமிழகஅரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையே கடந்த திங்கள்கிழமை தஞ்சாவூர் சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா, காவிரி டெல்டாவிவசாயிகளுக்கு அங்கேயே வேறு வேலை வாய்ப்பு தருவதற்காக ரூ. 164 கோடியில் திட்டங்களை அறிவித்தார்.
இந்நிலையில் காவிரி பிரச்சனை தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து விவாதிப்பதற்காகதமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது.
கடந்த 21ம் தேதி தமிழக அமைச்சரவை கூடிய நிலையில் இன்று மீண்டும் கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications