For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி வறண்டதால் விவசாயிகள் எலிகளை சுட்டு சாப்பிடுகின்றனர்: ஜெ. பரபரப்பு தகவல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

காவிரிப் பிரச்சனையில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தமிழகம் தயாராக இல்லை என முதல்வர்ஜெயலலிதா திட்டவட்டமாகக் கூறினார்.

இன்று கோட்டையில் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா,

கர்நாடக முதல்வருடன் பேச்சு நடத்த வேண்டும் என பலரும் கூறுகின்றனர். அது எந்தப் பலனையும் தராது. முன்புஅவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதும் அர்த்தமில்லாமல் போய்விட்டது.

அவர்களுடன் பேசி நியாயம் கிடைக்காது என்பதால் தானே நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும் என்று நாம்கோரினோம்.

நீர் திறந்துவிட முடியாத நிலையில் இருப்பதாக கர்நாடக முதல்வர் கிருஷ்ணா எழுதியுள்ள கடிதத்தில் ஏகப்பட்டகுழப்பம் உள்ளது. அதில் கூறப்பட்டுள்ள அணைக்கட்டுகளின் நீர் அளவு, மழை அளவு, விவசாய பரப்பளவுஆகிய விவரங்கள் தவறாக உள்ளன. அவர் தொடர்ந்து தவறான தகவல்களைத் தான் வெளிட்டு வருகிறார்.

அந்தத் தவறுகளை சுட்டிக் காட்டி அவருக்கு பதில் கடிதம் அனுப்ப உள்ளேன்.

மழை இல்லை என்பதெல்லாம் கர்நாடகம் போடும் வேஷம். தமிழகத்துத் தண்ணீர் தரக் கூடாது என்பதற்காகஅணையின் நீர் மட்டத்தைக் குறைத்து விவரங்களை வெளியிடுகிறார்கள். தமிழகத்துக்கு நீர் தர வேண்டுமே என்றஎண்ணமே இல்லாமல் தங்களது பாசனப் பகுதியை திட்டமிட்டு விரிவாக்கிவிட்டு இப்போது பொய்யானவிவரங்களை தந்து கொண்டுள்ளனர்.

இவர்களிடம் போய் பேசினால் என்ன நியாயம் கிடைத்துவிடப் போகிறது. இதற்கு ஒரே தீர்வு உச்ச நீதிமன்றம் தான்என்றார் ஜெயலலிதா.

உங்களையும் கிருஷ்ணாவையும் அழைத்துப் பேச பிரதமர் வாஜ்பாய் திட்டமிட்டுள்ளாரே என்று கேட்டபோது,நான் பத்திரிக்கைகளில் தான் இதைப் பார்க்கிறேன். இதுவரை காவிரி தொடர்பாக என்னுடன் பிரதமர்பேசவேயில்லை. ஒருவேளை பேச்சுவார்த்தைக்குக் கூப்பிட்டால் கலந்து கொள்வதா இல்லையா என்பதைஅப்போது முடிவு செய்வோம் என்றார்.

நீங்கள் ஆணையத்தை புறக்கணிப்பதை பலரும் எதிர்த்துள்ளனரே என்று கேட்டபோது, நான் என்ன முடிவுஎடுத்தாலும் அதை எதிர்க்கும் சில கட்சித் தலைவர்கள் தான் இப்போதும் அதை எதிர்த்து அறிக்கை விட்டுவருகிறார்கள். நான் இவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. விவசாயிகளின் நிலையை நினைத்துத் தான்கடுமையான முடிவை எடுத்தோம்.

விவசாயிகள் வேலை இல்லாமல் கேரளா போன்ற மாநிலங்களுக்கு கூலி வேலை தேடி குடிபெயரஆரம்பித்துவிட்டனர். அங்கு அவர்களுக்கு ஒரு நாள் கூலியாக ரூ. 20 மட்டுமே தரப்படுகிறது.

சில இடங்களில் விவசாயக் கூலி பசியாற்றிக் கொள்ள எலிகளை சுட்டு சாப்பிட ஆரம்பித்திருப்பதாகவும் எனக்குதகவல்கள் கிடைத்தன. இவர்களை மனதில் வைத்து தான் 164 கோடி ரூபாய்க்கு மாற்று வேலைவாய்ப்பு திட்டத்தைஅறிவித்தேன். இதனால் 9.63 லட்சம் விவசாயிகள் பயனடைவர் என்றார் ஜெயலலிதா.

தமிழகத்துக்கு 3 டி.எம்.சி. நீர் தர கர்நாடகத்துக்கு வாஜ்பாய் உத்தரவு

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X