இலங்கை: புலிகளின் பகுதியில் புதிய வரிகள் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் விற்பனை செய்யப்படுவதற்காகக் கொண்டு வரபபடும் பொருள்களுக்கு5 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை சுங்க வரி (கஸ்டம்ஸ்) விதிக்கப்பட உள்ளதாக விடுதலைப் புலிகள்அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே இது போன்ற வரி வசூலை புலிகள் மேற்கொண்டுள்ளனர். ஆனால், இப்போது தான்அதிகாரப்பூர்வமான முறையில் இதனை புலிகள் வெளியிட்டுள்ளனர்.

அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடக்கவுள்ள நிலையில் புலிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

மொத்தம் 61 பொருள்களுக்கு வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதில் மதுபானம், சிககெட் மீது கடுமையான வரி விதிக்கப்பட்டுள்ளது. சிகரெட் மீது 35 சதவீதமும் மதுபானத்துக்கு20 சதவீதமும் வரி போடப்பட்டுள்ளது. அதே போல அழகு சாதனங்கள், மெழுகுவர்த்திக்கு அதிக வரிவிதிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மீன் பிடித்தல், விவசாயத்துக்கான உபகரணங்கள், உரம், கருவிகளுக்கு வரிகள் குறைவாகபோடப்பட்டுள்ளன.

முட்டை ஒவ்வொன்றுக்கும் ரூ 1 வரி விதிக்கப்பட்டுள்ளது. சமையல் காஸ் மீதான வரி 12.5 சதவீதமும், ஒவ்வொருலிட்டர் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மீதும் தலா ரூ. 5ம் வரியாக விதிக்கப்பட்டுள்ளது.

டீ மற்றும் காபிக்கு 7 சதவீத வரியும், காய்கறிகளுக்கு 15 சதவீத வரியும், பழங்களுக்கு 10 சதவீத வரியும்,பிஸ்கெட், ஐஸ்கிரீமுக்கு 15 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வீட்டு உபயோகத்துக்காகப் பயன்படுத்தப்படும் அரிசி உள்ளிட்ட பொருள்களுக்கு, குறிப்பிட்ட அளவுவரை, வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாணவ- மாணவிகள் பயன்படுத்தும் புத்தகங்கள், நோட்டுகள்விளையாட்டுக் கருவிகள், கம்ப்யூட்டர்கள், வார இதழ்கள், நாளிதழ்கள், குழந்தைகளின் உணவு, அயோடின் கலந்தஉப்பு, குழந்தைகளுக்கான நாப்கின் போன்ற 21 பொருள்களுக்கு முழு வரி விலக்கு தரப்பட்டுள்ளது.

அரசுப் பணி நிமித்தமாக பிற பகுதிகளில் இருந்து தமிழ் ஈழ பகுதிக்குள் வரும் அரசுத்துறை, தனியார்துறைஊழியர்களுக்கு சுங்க வரி இல்லை. அதே போல இலங்கையின் பிற பகுதிகளில் இருந்தும், பிற நாடுகளில்இருந்தும் யாழ்பாணத்தில் நிரந்தரமாகக் குடியேற விரும்புபவர்களுக்கும் வரி விலக்கு தரப்பட்டுள்ளது.

வன்னி பகுதிக்கு கொண்டு வரப்படும் பொருள்களுக்கு சுங்க வரி வசூலிக்க ஒமந்தையில் ஏற்கனவேஅலுவலகங்களை அமைத்து புலிகள் வசூல் செய்து வருகின்றனர். இப்போது இந்த வரி வசூல் அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசு எல்லா பொருள்களுக்கும் சராசரியாக 12.5 சதவீத வரி விதிக்கிறது. இந்த வரிக்கு மேல் தமிழர்பகுதிகளில் புலிகளும் வரி விதித்து வருகின்றனர். தமிழர் விடுதலைக்காக போராடவே இந்த வரியை வசூல்செய்வதாக புலிகள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+