மதுரை மாநகராட்சியில் திமுக- அதிமுகவினர் கடும் மோதல்
மதுரை:
சென்னை மாநகராட்சி, விழுப்புரம், ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சிகளைத் தொடர்ந்து திமுக ஆட்சியில் உள்ள மதுரைமாநகராட்சியிலும் அதிமுகவினர் இன்று மோதலில் ஈடுபட்டனர். மேயரின் மேஜை மீது பைல்களை தூக்கி வீசிஅதிமுக கவுன்சிலர்கள் அடாவடி செய்தனர்.
சென்னை மாநகராட்சியில் மேயர் பதவியில் இருந்த ஸ்டாலினை அதிமுக அரசு சட்டம் போட்டு கட்டம் கட்டியது.
அதிமுகவில் இருந்து திமுகவில் சேர்ந்த தாமரைக்கனியின் கட்டுப்பாட்டில் தான் ஸ்ரீவில்லிப்புத்தூரில் நகராட்சிப்பொறுப்பு உள்ளது. இதனால் அவர் மீது சட்டரீதியிலும், அரசியல்ரீதியிலும் நடவடிக்கை எடுத்து வருகிறது அதிமுக.நேற்று அவரது இளைய மகனை அதிமுகவில் உள்ள இன்னொரு மகனின் ஆட்கள் கத்தியால் குத்தினர்.
நேற்று திமுக ஆட்சியில் உள்ள விழுப்புரம் நகராட்சியில் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டனர். நகராட்சித்தலைவருக்கு அடி உதை விழுந்தது. இரு தரப்பினரும் சாலை மறியலில் இறங்கினர்.
இதையடுத்து திமுக ஆட்சிப் பொறுப்பில் உள்ள மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளைக்கலைக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக திட்டமிட்ட கலவரத்தை நடத்தி வருவதாகவும் திமுக தலைவர்கருணாநிதி இன்று அறிக்கை வெளியிட்டார்.
இந்த அறிக்கை வந்த சில மணி நேரங்களில் மதுரையில் திமுக ஆட்சியில் உள்ள மாநகராட்சி மன்றத்தில்அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாநகராட்சியின் கூட்டம் இன்று காலை மேயர் செ.ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. மாநகராட்சியின்புதிய ஆணையாளரான கார்த்திக்கை மேயர் அறிமுகம் செய்து வைத்தார்.
இதையடுத்துப் பேசிய தி.மு.க. கவுன்சிலர் பாக்கியநாதன், சென்னை மேயர் ஸ்டாலினிடம் இருந்து சென்னைமேயர் பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசினார். இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக்கூறினார். இதையடுத்து திமுகவினர் வெளியேறினர்.
அப்போது எழுந்த அதிமுக குழுத் தலைவர் ஜெயபால், மதுரை மாநகராட்சியில் சென்னை மேயர் விவகாரத்தைப்பேசுவதா, அதை மேயர் அனுமதிப்பதா என்று கேட்டார்.
மேயர் பதில் சொல்லிக் கொண்டிருந்தபோதே அவரது மேஜை மீது ஜெயவேல் என்ற அதிமுக கவுன்சிலர் சிலபைல்களைத் தூக்கி ஏறிந்தார்.
தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் மேயரின் இருக்கை முன் வந்து அமர்ந்து கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து வெளிநடப்பு செய்த தி.மு.க. கவுன்சிலர்கள் மீண்டும் உள்ளே ஓடிவந்தனர். அவர்களுக்கும்அதிமுகவினருக்கும் இடையே கடும் மோதல் எழுந்தது. இரு தரப்பினரும் நீ.. வா.. என்று ஒருமையில் திட்டிக்கொண்டனர். கிட்டத்தட்ட அடிதடி ஏற்படும் சூழ்நிலை உருவானது.
இவர்கள் பேசிய வார்த்தைகளைக் கேட்க முடியாத பெண் கவுன்சிலர்கள் காதைப் பொத்திக் கொண்டு ஓடினர். இருதரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர். இதனால் சபையை மேயர் ஒத்தி வைத்தார். இதன்பிறகும் நீண்ட நேரம் கத்திக் கொண்டிருந்த இரு தரப்பினரும் பின்னர் அமைதியடைந்தனர். இதைத் தொடர்ந்துகூட்டமும் மீண்டும் தொடங்கியது.
அதிமுகவினரின் செயலைக் கண்டித்து த.மா.கா, கம்யூனிஸ்ட் கட்சிகளின் கவுன்சிலர்களும் வெளிநடப்புசெய்தனர்.
இந்த அதிமுக- திமுக மோதல் மாநிலத்தின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் இனி தொடரும் என்றுதெரிகிறது.
திமுக ஆட்சியில் உள்ள நகராட்சிகளில் கலவரத்தை நடத்தி அவற்றைக் கலைத்துவிட அரசு திட்டமிட்டுள்ளதாககருணாநிதி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications