குழந்தையைக் கடத்தி ரூ. 20 லட்சம் கேட்ட டிரைவர் கைது
சென்னை:
சென்னையில் ஒன்றரை வயது குழந்தையைக் கடத்தி ரூ. 20 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய கார் டிரைவர் உள்ளிட்டகும்பலை பொது மக்களின் உதவியுடன் சில மணி நேரத்தில் போலீசார் சுற்றி வளைத்து குழந்தையை மீட்டனர்.
சென்னை தாம்பரத்தைச் சேர்தவர் ஜெயக்குமார். இவரது மகள் சுஜாதா- மருமகன் பிரசாந்த் ஆகியோர் மஸ்கட்டில்வசித்து வருகின்றனர். இவர்களது குழந்தை சங்கர்பிரசன்னா.
சில மாதங்களுக்கு முன் மஸ்கட்டில் இருந்து தந்தை ஜெயக்குமாரின் வீட்டுக்கு வந்த சுஜாதா இன்றுஇந்தியாவிலிருந்து புறப்பட இருந்தார்.
இந் நிலையில் மார்க்கெட்டுக்கு செல்வதற்காக பேரக் குழந்தை சங்கர்பிரசன்னாவுடன ஜெயக்குமார் காரில்புறப்பட்டார். காரை அதன் டிரைவர் குரு ஓட்டிச் சென்றார்.
மார்க்கெட் சென்ற ஜெயக்குமார் அங்கிருந்து உறவினர் வீட்டுக்குச் சென்றார். உறவினர் வீட்டில் இறங்கிக் கொண்டஜெயக்குமார், குழந்தையை அழைத்துத் கொண்டு வீட்டுக்குத் திரும்புமாறு டிரைவர் குருவிடம் கூறினார்.
ஆனால், குரு வீட்டுக்குச் செல்லாமல் குழந்தையைக் கடத்திக் கொண்டு படப்பை பகுதியில் உள்ள தனதுநண்பர்களின் வீட்டுக்குச் சென்றுவிட்டான்.
சில மணி நேரம் கழித்து வீட்டுக்குத் திரும்பினார் ஜெயக்குமார். காரும், டிரைவர், குழந்தை மூவரும் வீடுதிரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவர் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிய நேரத்தில் ஒரு தொலைபேசிஅழைப்பு வந்தது.
அதில் பேசிய குரு, இன்னொரு காரில் வந்து வழிமறித்த ஒரு கும்பல் குழந்தையை காஞ்சிபுரம் பகுதிக்கு கடத்திச்சென்றுவிட்டதாகவும், ரூ. 20 லட்சம் தந்தால் தான் குழந்தையை அவர்கள் விடுவிப்பார்கள் என்றும் கூறினான்.மேலும் போலீசுக்கு தகவல் தந்துவிட வேண்டாம் என்றும் எச்சரித்தான். பணத்தை படப்பைக்கு எடுத்து வரும்படிஅந்தக் கும்பல் தன்னிடம் கூறியதாகவும் கூறினான்.
இதையடுத்து ஜெயக்குமார் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவர்கள் காலர்-ஐடியைஜெயக்குமாரின் தொலைபேசியில் பொறுத்திவிட்டுக் காத்திருந்தனர்.
போலீசார் நினைத்தது போலவே குரு மீண்டும் ஜெயக்குமாரின் வீட்டுக்கு போன் செய்தான். அந்த தொலைபேசிஎண்ணை வைத்து எங்கிருந்து குரு போன் செய்கிறான் என்பதை அறிந்து கொண்ட போலீசார் அங்கு விரைந்தனர்.
மாறு வேடத்தில் அந்தப் பகுதிக்குச் சென்ற போலீசார் குரு பதுங்கியிருந்த வீட்டை அடையாளம் கண்டுபிடித்தனர்.பின்னர் பொது மக்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டு வீட்டை முற்றுகையிட்டு குழந்தையை மீட்டனர்.
குருவுக்கு உடந்தையாக இருந்த அவனது நண்பன் மகேஷ் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து குழந்தையைமீட்டனர்.
வீட்டில் கடத்தப்பட்டது தெரியாத அந்த 16 மாதக் குழந்தை டிரைவர் குருவுடன் கொஞ்சி விளையாடிக்கொண்டிருந்தது.
மீட்கப்பட்டு குரோம்பேட்டை காவல் நிலையத்துக்கு அந்தக் குழந்தை கொண்டு வரப்பட்டது. உடன் டிரைவர் குரு,மகேசும் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
அந்த குழந்தை எல்லோரையும் விட்டுவிட்டு குருவிடம் தான் ஓடிச் சென்று விளையாடியது. இதைக் கண்ட குருகண்கலங்கினன். அந்தக் குழந்தையின் காலைப் பிடித்துக் கொண்டு அழுதான்.
கடந்த சில மாதங்களாக சென்னையில் தங்கியிருக்கும் அந்தக் குழந்தை வீட்டில் டிரைவர் குருவிடம் தான் மிகநெருக்கமாக இருந்து வந்துள்ளது.
குழந்தையை மீட்பதில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட எஸ்.பி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான படை மிகவேகமாக செயல்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications