நடுரோட்டில் நர்ஸ் கழுத்தை அறுத்துக் கொலை: கணவன் வெறிச் செயல்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

பவானிசாகரில் விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு போட்ட மனைவியை கணவர் நடுரோட்டில் வெட்டியும்,கழுத்தை அறுத்தும் கொன்றார்.

பின்னர் தானும் கழுத்தை அறுத்துக் கொண்டார். பஸ் ஸ்டாண்ட் அருகே நடு ரோட்டில் நடந்த இந்தச் சம்பவத்தால்அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

பவானிசாகரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணி புரிந்து வருகிறார்.இவரது மனைவி சாவித்திரி அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

இருவருக்கும் நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வந்தது. இதனால் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் சாவித்திரி தனது கணவரிடம் இருந்து விவாகரத்து தருமாறு கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

நேற்று இரவு சாவித்திரி பணி முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது பவானிசாகர் பஸ் ஸ்டாண்ட் அருகே வழி மறித்த கணவர் கோவிந்தராஜ், சாவித்திரியை சரமாறியாககத்தியால் குத்தினார். அவர் உதவி கேட்டு கூச்சல் எழுப்பியும் யாரும் வரவில்லை. வெறித்தனமாக தாக்கியகோவிந்தராஜைப் பார்த்து பொது மக்கள் பயந்து ஓடினர்.

இதன் பின்னர் சாவித்திரியின் கழுத்தை கத்தியால் அறுத்தார் கோவிந்தராஜ். துடிதுடித்த சாவித்திரி அந்தஇடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

இதன் பின்னர் கத்தியைக் கொண்டு தனது கழுத்தை கோவிந்தராஜ் தானே அறுக்க ஆரம்பித்தார். இதைக் கண்டுஅலறிய பொது மக்கள் போலீசாருக்குத் தகவல் தந்தனர். பஸ் ஸ்டாண்ட் அருகே நின்றிருந்த போலீசார் ஓடி வந்தகோவிந்தராஜை மடக்கினர்.

அவரது கையில் இருந்த கத்தியைப் பறித்து அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனையில் பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடி வருகிறார் கோவிந்தராஜ்.

நடுரோட்டில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+