ஸ்டேசன் மாஸ்டர்கள் ஸ்டிரைக்: ரயில் போக்குவரத்து பாதிக்கும்
சென்னை:
அடுத்த மாதம் 18ம் தேதி முதல் இரு நாட்களுக்கு தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட ஸ்டேசன் மாஸ்டர்கள்திட்டமிட்டுள்ளனர். இதனால் ரயில் போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு, சீருடை அலவன்ஸ் உள்பட 11 கோரிக்கைகளை முன் வைத்து 18 மறறும் 19ம் தேதிகளில் இந்தப்போராட்டத்தை நடத்த ரயில்வே ஸ்டேசன் மாஸ்டர்கள் திட்டமிட்டுள்ளனர்.
நாடு முழுவதும் நடத்தப்படவுள்ள இந்த போராட்டத்தால் நீண்ட தூரம் செல்லும் ரயில்கள் நடு வழியில் நிற்கவேண்டிய நிலை ஏற்படும்.
ரயில்கள் ஒரு ஸ்டேசனில் நிற்க வேண்டுமா இல்லையா என்பதை ஸ்டேசன் மாஸ்டர்கள் தான் பச்சை அல்லதுசிவப்பு கொடியசைத்து டிரைவர்களக்குத் தகவல் தருவர்.
ஸ்டேசன் மாஸ்டர் கொடியசைக்கத் தவறினால் அந்த ரயில் நிலையத்தில் ரயில் நின்றுவிட வேண்டும். ஸ்டேசன்மாஸ்டருக்கு உரிய அதிகாரமுள்ள அதிகாரி தான் ரயிலின் பயணத்தை தொடர ஆணையிட முடியும்.
இதனால், இவர்களின் போராட்டத்தால் அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்கள் நிற்க வேண்டிய நிலைஏற்படும். அதிகாரிகளிடம் எழுத்துப் பூர்வமாக ஆணை வாங்கிக் கொண்டு தான் தொடர்ந்து செல்ல முடியும். இந்தஆணை வாங்க குட்டி ரயில் நிலையங்கள் உள்பட எல்லா இடங்களிலும் ரயில்கள் நிற்க வேண்டி வரும்.
இதனால் இந்த ரயில்கள் ஊர் போய்ச் சேர பல மணி நேரம் தாமதமாகும். நீண்ட தூர ரயில்கள் ஒரு நாள் கூடதாமதமாகலாம். இதனால் ஏற்படும் குளறுபடியால் எல்லா ரயில்களின் நேரமும் மாறிவிடும் நிலையும் உருவாகும்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications