54 வயதில் கள்ளக் காதல்: மனைவியின் தலையை வெட்டி எடுத்து ஊர்வலம் சென்ற கணவர்

Subscribe to Oneindia Tamil

சேலம்:

பேரன் பேத்திகள் எடுத்த 54 வயது பெண் கள்ளக் காதலில் ஈடுபட்டதால் அவரை கணவர் கழுத்தை வெட்டிக்கொன்றார். வெட்டிய தலையை எடுத்துக் கொண்டு 10 கி.மீ. தூரம் நடந்து வந்து காவல் நிலையத்தில் வீசினார்.

இந்த பேரதிர்ச்சி தரும் சம்பவம் சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே உள்ள தாராபுரம் என்ற கிராமத்தில்நடந்தது.

இந்த ஊரைச் சேர்ந்த விவசாயி குப்புசாமியின் (56) மனைவி பெருமாயி (54). திருமணமாகி 37 ஆண்டுகள்ஆகிவிட்டன. இவர்களுக்கு 3 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். 4 குழந்தைகளுக்கு திருமணமாகி பேரன்பேத்திகளும் உள்ளனர்.

சமீபகாலமாக பெருமாயிக்கும் அதே ஊரைச் சேர்ந்த 50 வயதான சுப்பிரமணி என்பவருக்கும் கள்ளத் தொடர்புஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனது கணவர், குழந்தைகளை விட்டுவிட்டு சுப்பிரமணியுடன் தனியே குடித்தனம்நடத்தினார்.

பின்னர் ஊர்க்காரர்கள் பேசி இந்த கள்ளத் தொடர்பை துண்டித்து பெருமாயியை மீண்டும் குப்புசாமியுடன் சேர்த்துவைத்தனர். ஆனால், மீண்டும் அவரை விட்டுவிட்டு சுப்பிரமணியுடன் வசிக்க ஆரம்பித்தார் பெருமாயி.

இந் நிலையில் சமீபத்தில் வீட்டுக்கு வந்த பெருமாயி அங்கேயே இரவில் தூங்கினார். இந்த சந்தர்ப்பத்தைபயன்படுத்தி அவரைக் கொலை செய்ய குப்புசாமி திட்டமிட்டார். நள்ளிரவு 2 மணியளவில் எழுந்த குப்புசாமிகோடாரியால் பெருமாயியின் கழுத்தை வெட்டினார்.

இதில் தலை துண்டானது. உடல் மட்டும் சில நிமிடங்கள் துடித்துவிட்டு அடங்கியது.

தலையை எடுத்துக் கொண்டு கிராம நிர்வாகியின் வீட்டுக்கு சென்று கதவைத் தட்டினார் குப்புசாமி. இதைக் கண்டுஅதிர்ந்து போன கிராம நிர்வாகி உடனே காவல் நிலையத்தில் சரணடையுமாறு அவரிடம் கூறினார்.

இதையடுத்து சுமார் 10 கி.மீ. தூரம் வெட்டிய தலையை முடியைப் பிடித்துத் தூக்கிக் கொண்டு நள்ளிரவில் அவர்நடந்து சென்றார். அதிகாலையில் ஓமலூர் காவல் நிலையத்தை அடைந்த அவர் விவரத்தை போலீசாரிடம்கூறிவிட்டு தலையை வீசினார்.

அவரை உடனடியாகக் கைது செய்தனர் போலீசார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+