திமுக ஒரு வற்றாத ஜீவ நதி: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் திமுக ஆட்சியில் உள்ள நகராட்சிகளில் அதிமுகவினர் அராஜகம் செய்து வருவதைக் கண்டுபயந்துவிட மாட்டோம் என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

சென்னை மாநகராட்சியில் ஆரம்பித்து, மதுரை, கோவை மாநகராட்சி, ஆலந்தூர், ஸ்ரீவில்லிப்புத்தூர், ஈரோடுநகராட்சி என பல திமுக ஆட்சியில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் அதிமுக கவுன்சிலர்கள்மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாற்காலிகள் வீச்சு, அடிதடி, மைக் உடைப்பு, பேன் உடைப்பு போன்ற சம்பவங்கள் கடந்த சில நாட்களாக தொடர்கதையாகிவிட்டன. கலவரத்தை ஏற்படுத்தி திமுக ஆட்சியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளைக் கலைத்துவிடஅதிமுக அரசு முயல்வதாக கருணாநிதி ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ளார்.

இந் நிலையில் இன்று கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அதிமுகவினரின் அராஜம், அரட்டல், மிரட்டலுக்கு எல்லாம் திமுக பயந்துவிடாது. இந்த அசிங்கங்களை எல்லாம்தாண்டியும் திமுக தனது பயணத்தை, பணியைத் தொடரும்.

அதிமுகவினர் யாரைக் கைது செய்ய வேண்டும் என்று கண்ஜாடை காட்டுகிறார்களோ அவர்களை போலீசார் கைதுசெய்யும் ஜனநாயகக் கொலையும் நடந்தது வருகிறது.

என்ன நடந்தாலும் சரி, மக்களுக்கு சேவை செய்யும் பணியை திமுக என்றும் கைவிடாது. திமுக ஒரு வற்றாத ஜீவநதி. நதியின் பிரவாகம் மேடு பள்ளங்களை சமப்படுத்துவது போல திமுகவும் மொழி, இன, மத வேறுபாடுகளைக்கலைந்து மக்களுக்காக தொடர்ந்து உழைக்கும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

மகளிரணி போராட்டம்:

இதற்கிடையே ஸ்டாலினின் மேயர் பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து திமுக மகளிர் அணியினர் இன்றுசென்னையில் ஆர்பாட்டம் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான திமுகவினர் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+