கர்ப்பமானார் தலால் ஆஸ்மி: வேலையின்றி கஷ்டப்படும் காதர்பாட்சா
சென்னை:
குவைத்திலிருந்து காதலி தலால் ஆஸ்மியுடன் சென்னைக்கு தப்பி வந்த ஆந்திர இளைஞரான காதர் பாஷா வேலை எதுவும் கிடைக்காமல்அவதிப்பட்டு வருகிறார்.
இந் நிலையில் அவரது குவைத் மனைவி தலால் ஆஸ்மி கர்ப்பமாக உள்ளார்.
குவைத்தில் ஒரு வீட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தவர் ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த காதர் பாஷா. இவருக்கும் அந்தவீட்டைச் சேர்ந்த தலால் ஆஸ்மிக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஆனால் குவைத்தில் தங்களுக்கு வாழ்க்கை இல்லை என்று பயந்த காதல்ஜோடி போலி பாஸ்போர்ட் மூலம் சென்னைக்குத் தப்பி வந்தது.
இதையடுத்து சென்னையில் கைது செய்யப்பட்ட தலால் ஆஸ்மி சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் ஜாமீனில் விடுதலைசெய்யப்பட்டார். அதன் பிறகு இருவரும் ஆந்திராவிற்கு சென்று அங்கு உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
காதலியுடன் இந்தியாவிற்கு தப்பி வந்த காதர்பாஷாவுக்கு இதுவரை ஒரு வேலையும் கிடைக்கவில்லை. நிரந்தரமான வேலை கிடைக்காதகாரணத்தால் குடும்பத்தை நடத்துவது மிகவும் சிரமமாக உள்ளதாக காதர் பாஷா கூறியுள்ளார்.
சென்னை ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜராவதற்காக மனைவி தலால் ஆஸ்மியுடன் திங்கள்கிழமை சென்னை வந்திருந்தார் காதர் பாஷா.கோர்ட்டில் ஆஜரான பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த மனைவியை நல்லபடியாக வைத்துக் கொள்ள முடியவில்லை. இது பெரும் வருத்தமாக இருக்கிறது. ஆனால்எனது மனைவி அதைப் பற்றியெல்லாமல் கவலைப்படாமல், என் குடும்பத்தாரோடு பாசமாக இருக்கிறார். இப்போது எனது மனைவி 2 மாதகர்ப்பமாக உள்ளார் என்றார் காதர் பாஷா.
-->
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications