ஜெர்மனியில் வானில் விமானங்கள் மோதல்: 71 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

ஸ்டட்கர்ட் (ஜெர்மனி):

ஜெர்மனியின் தெற்குப் பகுதியில் வானில் பறந்து கொண்டிருந்த இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி வெடித்துச்சிதறியதில் சுமார் 71 பேர் உயிரிழந்தனர். இதில் 44 பேர் ரஷ்யக் குழந்தைகள்.

ஜெர்மன் நேரப்படி நேற்று இரவு 11.43 மணிக்கு இந்த விபத்து நடந்தது. ரஷ்ய பயணிகள் விமானமும், டி.எச்.எல்.கூரியர் சர்வீஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு விமானமும் வானில் 36,000 அடி உயரத்தில் நேருக்கு நேர்மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.

வானில் மிகப் பெரிய வெடிச் சத்தம் கேட்டதாகவும் பின்னல் வானத்திலிருந்து நெருப்புக் கோளங்கள் பல கி.மீ.தூரத்துக்கு சிதறி விழுந்ததாகவும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். இதில் சரக்கு விமானத்தின் பெரிய பகுதிஏரிக்குள் விழுந்தது.

ரஷ்யாவின் பஸ்கிரியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான டுபலோவ்- 154 ரக விமானம் மாஸ்கோவில் இருந்துஸ்பெயின் தலைநகர் பார்சிலோனாவுக்குச் சென்று கொண்டிருந்தது. இதில் 57 பயணிகளும் 12 சிப்பந்திகளும்மட்டுமே இருந்ததாக ரஷ்யாவில் உள்ள ஜெர்மன் தூதரகம் கூறியுள்ளது.

இதில் 44 பேர் பேர் ரஷ்ய பள்ளிக் குழந்தைகள். ஸ்பெயின் தலைநகருக்கு பள்ளிச் சுற்றுலாவுக்காக சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது.

அதே போல போயிங் 757 ரக சரக்கு விமானம் பஹ்ரைனில் இருந்து பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ்சுக்கு சென்றுகொண்டிருந்தது. இதில் 2 விமானிகள் மட்டுமே இருந்தனர்.

சுவிட்சர்லாந்து- ஆஸ்திரியா எல்லை அருகே தெற்கு ஜெர்மனியின் யுபெர்லிங்கென் என்ற இடத்தில் பறந்துசென்றபோது இந்த இரு விமானங்களும் நேருக்கு நேர் மோதின.

உடைந்து சிதறிய விமானங்களின் பாகங்கள் சுமார் 30 கி.மீ. தூரத்துக்கு சிதறி விழுந்தன.

டுபலோவ் ரக விமானங்கள் மிகப் பழையவை. இதில் நவீன தொழில்நுட்பங்கள் இல்லை. இதனால் எதிரில் வரும்விமானத்தை இதனால் கண்டறிய முடியாது. ஆனால், போயிங் விமானத்தில் எதிரில் வரும் விமானம் தவிரஅருகில் பறக்கும் விமானங்கள் குறித்த அனைத்துத் தகவல்களும் பதிவாகிவிடும்.

ரஷ்ய விமானத்தின் உயரத்தை குறைக்குமாறு சுவிஸ் நாட்டு விமானத்துறை தரைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள்பலமுறை எச்சரித்தும் கூட அந்த விமானம் தவறான உயரத்தில் பறந்ததாகக் கூறப்படுகிறது.

எதிரில் விமானம் வருவதை உணர்ந்து போயிங் விமானிகள் பாதையை மாற்றுவதற்குள் விபத்து நடந்துவிட்டதாகக்கூறப்படுகிறது.

இதுவரை 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. டுபலோவ் விமானத்தின் பிளாக் பாக்ஸ் மீட்கப்பட்டுவிட்டது. விபத்துநடந்த இடம் பிராங்பர்டில் இருந்து 220 கி.மீ. தொலைவில் உள்ளது.

கடந்த 1996ம் ஆண்டு இந்தியாவில் இது போன்ற விமான மோதல் விபத்து நடந்தது. ஹரியாணாவின் மீது பறந்துகொண்டிருந்த சவுதி ஏர்வேஸ் விமானமும் கஸாாக்கிஸ்தான் பயணிகள் விமானமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 351 பேர் உயிரிழந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+