உண்ணாவிரத்தை எதிர்த்து சாலைமறியல்!!
சேலம்:
சேலத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர்களை எதிர்த்து முற்றுகைப் போராட்டம் நடந்தது.
சேலம் பழைய பரூர்மங்கலம் பகுதியில் உள்ள பெரியார் தெருவில் நூற்றுக்கணக்கான ஏழைக் குடும்பங்கள்அரசின் புறம்போக்கு நிலத்தில் வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு சமீபத்தில் வீட்டு மனைக்கான பட்டாக்களை சேலம் மாநகராட்சி வழங்கியது. இதனால் இந்தக்குடும்பங்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தன.
இந்த பட்டாக்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடந்தாகக் கூறி தமிழ் மாநில பொது மக்கள் நல்வாழ்வுச் சங்கத்தைச்சேர்ந்தவர்கள் சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
இதற்கு இந்தச் சங்கத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைக் கண்டித்து வீட்டு மனைப் பட்டா பெற்ற பொது மக்கள்பாலசுப்பிரமணியத்தையும் உண்ணாவிரதம் நடத்திக் கொண்டிருந்தவர்களையும் முற்றுகையிட்டனர்.
முற்றுகையிட்டவர்களில் பெரும்பான்மையினர் பெண்கள். இதையடுத்து அந்தப் பெண்களுக்கு எதிராகஉண்ணாவிரதம் இருந்தவர்கள் கோஷம் எழுப்பினர். அந்தப் பெண்கள் உண்ணாவிரதம் இருந்தவர்களைப் பார்த்துதிட்டினர்.
இதனால் இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழல் உருவானது. இந் நிலையில் அந்தப் பெண்கள் திடீரெனசாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார் வந்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் தான் அந்தப் பெண்கள் கலைந்து சென்றனர்.
உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கு எதிராக நடந்த இந்த பொது மக்களின் போராட்டத்தால் அந்தப் பகுதியில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.
-->












Click it and Unblock the Notifications