அமைச்சர் பதவி: எம்.பியை ஏமாற்றிய ராமதாஸ்
சென்னை:
மத்திய அமைச்சர் பதவி கொடுப்பதாக வாக்குறுதி அளித்து விட்டு பின்னர் தன்னை ஏமாற்றி விட்டதாக பாமகஎம்.பி. பு.தா. இளங்கோவன் அதிருப்தியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தர்மபுரி பாமக எம்.பியான இளங்கோவன் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் அன்புக்குப் பாத்திரமானவர்.குறுகிய காலத்தில் ராமதாஸின் நம்பிக்கையைப் பெற்றவர்.
வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் சமீபத்தில் செய்யப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின்போது பாமகசார்பில் மீண்டும் இரண்டு பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.
இக்கட்சியைச் சேர்ந்த ஏற்கனவே அமைச்சராக இருந்த என்.டி. சண்முகம் மற்றும் செங்கல்பட்டு எம்.பியான ஏ.கே.மூர்த்தி ஆகியோர் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர்.
ஆனால் முதலில் சண்முகம், இளங்கோவனுமே அமைச்சர்களாக பதவியேற்கப் போகிறார்கள் என்று செய்திவெளியானது. இதையடுத்து டாக்டர் ராமதாஸுடன் தொடர்பு கொண்ட இளங்கோவன், தனது பெயர் அமைச்சர்பதவிக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதை உறுதிப் படுத்திக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து இளங்கோவன் டெல்லிக்கும் சென்று விட்டார். ஆனால் திங்கள்கிழமை திடீர் மாற்றம்ஏற்பட்டது. இளங்கோவனுக்குப் பதில் ஏ.கே. மூர்த்தி மத்திய அமைச்சராகப் பதவியேற்பார் என்று பாமக தரப்பில்பிரதமருக்குத் தெரிவிக்கப்பட்டது.
இத்தகவல் இளங்கோவன் காதில் விழுந்ததும் மிகவும் கொதித்துப் போனார் அவர். நேராக டாக்டர் ராமதாஸ்தங்கியிருந்த ஹோட்டலுக்குப் போன அவர், ராமதாஸிடம் இதுகுறித்துக் கேட்டார். இது தொடர்பாக இருவருக்கும்இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து கோபத்துடன் அங்கிருந்து வெளியேறிய இளங்கோவன், அதே வேகத்தில் சென்னைக்கும்திரும்பினார்.
பாமக வட்டாரத்தில் இளங்கோவன்-ராமதாஸ் மோதல் குறித்து பரபரப்புடன் பேசப்படுகிறது. ராமதாஸ் மீதுஇளங்கோவன் கடும் அதிருப்தியுடன் இருப்பதாகவும், விரைவில் அவர் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்பார்என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
ராமதாஸின் "பாடிகார்ட்" போல இருப்பவர் மூர்த்தி. அந்த ஒரே காரணத்திற்காக அவருக்கு மத்திய அமைச்சர் பதவிகொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நீண்ட காலமாகக் கட்சியை வளர்க்கப் பாடுபட்ட இளங்கோவனுக்கு அமைச்சர்பதவி மறுக்கப்பட்டுள்ளது நியாயமே இல்லை என்று அவரது ஆதரவாளர்கள் குமுறுகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்திலும் இளங்கோவன் ஆதரவாளர்கள் கடும் கோபத்துடன் காணப்படுகின்றனர். பாமகதலைவரும், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவருமான ஜி.கே. மணியைக் கண்டித்து ஆங்காங்கே போஸ்டர்களும்ஒட்டப்பட்டுள்ளன.
எம்.எல்.ஏக்கள் ரூபத்தில் பாமகவுக்கு சமீப காலமாக பல்வேறு பிரச்சினைகள் வந்த வண்ணம் இருந்தன. இப்போதுஎம்.பி. ரூபத்திலும் ஆரம்பமாகி விட்டது.
மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்ட மூர்த்தி மற்றும் சண்முகம் ஆகியோர் வன்னியர் இனத்தைச்சேர்ந்தவர்கள். ஏமாற்றமடைந்த இளங்கோவனும் வன்னியர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications