ஜெ. திருந்தினால் ஆதரிப்பேன்: கருணாநிதி
திருச்சி:
ஆளும் ஜெயலலிதா அரசின் அராஜகங்கள் தொடர்ந்தால் அடுத்த 3 மாதத்தில் திமுக சிறை நிரப்பும்போராட்டத்தில் ஈடுபடும் என அக் கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஸ்டாலினின் மேயர் பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து திருச்சியில் நேற்று இரவு பொது கூட்டத்தில் கருணாநிதிபேசியதாவது:
ஜெயலலிதா அரசு போலீஸ் துணையுடன் அராஜகத்தை கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
அடாவடித்தனத்துடன் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிக்கிறார் அந்த அம்மையார். சர்வாதிகாரம்தலைந்தோங்கி வருகிறது. திமுக என்றும் வேட்டு முறையை நம்பியதில்லை. ஓட்டுமுறையைத் தான்நம்பியிருககிறது. அடாவடியில் நமக்கு நம்பிக்கை கிடையாது.
ஜெயலலிதா திருந்தி மக்களுக்காக நல்லபடியாக ஆட்சி நடத்தினால் அடுத்த 4 ஆண்டுகளும் அவரை ஆதரிக்கத்தயாராக இருக்கிறேன். மாறாக போலீசாரை வைத்துக் கொண்டு எங்களை ஒடுக்க நினைத்தால் அடுத்த 3 மாதத்தில்சிறை நிரப்பும் போராட்டத்தில் திமுக ஈடுபடும் என்று எச்சரிக்கிறேன்.
திமுகவில் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்தப் பணி 3 மாதத்தில் முடிவடைந்தவுடன் மாபெரும்போராட்த்தைத் தொடங்குவோம். அதற்குள் இந்த ஆட்சியாளர்கள் திருந்திவிட்டால், அவர்களை நிச்சயம்ஆதரிப்போம்.
நான் கொண்டு வந்தேன் என்ற ஒரே காரணத்துக்காக பல நல்ல திட்டங்களை ஜெயலலிதா முடக்கிவிட்டார்.கேட்டால் நிதித் தட்டுப்பாடு என்கிறார்.
அதிமுகவின் அடக்குமுறை அரசியலை ஒழித்துக் கட்ட திமுக எல்லா ஜனநாயக முறைகளையும் பின் பற்றிபோராடும் என்றார் கருணாநிதி.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications