லாஸ் ஏன்ஜெல்ஸ் விமான நிலையத்தில் தீவிரவாத தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏன்ஜெல்ஸ்:

லாஸ் ஏன்ஜெல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் இஸ்ரேலிய டிக்கெட் கவுண்டர் அருகே எகிப்து நாட்டைச் சேர்ந்ததீவிரவாதி ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் இறந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர்.

அந்தத் தீவிரவாதியை இஸ்ரேலிய விமான நிறுவனத்தின் பாதுகாப்புப் படையினர் உடனடியாக சுட்டுக்கொன்றதால் பெரிய அளவில் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்தத் தாக்குதலையடுத்து விமான நிலையத்தில் இருந்த 6,000 பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.அங்கிருந்து புறப்பட இருந்த பல விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. விமான நிலையம் மூடப்பட்டது.

இச் சம்பவம் தொடர்பாக ஒருவரை எப்.பி.ஐ. கைது செய்துள்ளது.

அமெரிக்காவில் செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க்கில் டுவின் டவர்கள் தகர்க்கப்பட்ட பின்னர் நடக்கும் முதல்தீவிரவாதத் தாக்குதல் இது தான். அமெரிக்காவில் 4ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டதையொட்டி கடந்தசில வாரங்களாகவே நாடு முழுவதும் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் மீண்டும் பெரிய அளவில் தாக்குதலுக்குத் தயாராகி வருவதாக துணை அதிபர் டிக்செனி கடந்த சிலவாரங்களாக மக்களை எச்சரித்து வந்தார்.

இந் நிலையில் விமான நிலைய துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

லாஸ் ஏன்ஜெல்ஸ் விமான நிலையம் தான் உலகில் 4வது மிக பிஸியான விமான நிலையம் என்பதுகுறிப்பிடத்தக்கது.

சுட்டுக் கொல்லப்பட்ட அந்தத் தீவிரவாதி எகிப்து நாட்டைச் சேர்ந்தவன் என்று தெரியவந்துள்ளது. அவனது பெயர்ஹஸ்ம் முகம்மத் ஹிதாயத். கிரீன் கார்ட் பெற்று அமெரிக்காவில் 10 ஆண்டுகளாக் தங்கியிருந்தவன்.கலிபோர்னியாவில் கார் டிரைவராகப் பணியாற்றி வந்தான். கடந்த இவனுடன் வந்த இன்னொரு நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இஸ்ரேல் விமான சர்வீசான எல்-அல் நிறுவனத்தின் டிக்கெட் கவுண்டரைத் தான் அந்தத் தீவிரவாதி குறி வைத்துச்சுட்டான். எப்போதும் மிகத் தீவிரமான கண்காணிப்புடன் இருக்கும் எல்-அல் நிறுவன டிக்கெட் கவுண்டரில்பாதுகாப்புப் பணியில் இருந்த வீரர் உடனடியாக அந்தத் தீவிரவாதி மீது பதில் தாக்குதல் நடத்திக் கொன்றார்.

கூட்டத்தில் மோதிய விமானம்:

இந் நிலையில் லாஸ் ஏன்ஜெல்ஸ் அருகே சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீதுசிறிய விமானம் மோதியது. இதில் 4 பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். 13 பேர் படுகாயமடைந்தனர். இதில்பலர் குழந்தைகள்.

இதில் விமானத்தை ஓட்டு வந்த விமானியும் இறந்தார். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாகஉள்ளது.

இன்று அதிகாலை 2 மணிக்கு இச் சம்பவம் நடந்தது. முதலில் இது தீவிரவாதிகள் தாக்குதலாக இருக்கலாம் என்றுகருதப்பட்டது. ஆனால், இப்போது இது விபத்து தான் என்று தெரியவந்துள்ளது.

லாஸ் ஏன்ஜெல்ஸ் நகரில் இருந்து 48 கி.மீ. தொலைவில் உள்ள பொனேலி பார்க் என்ற இடத்தில் ஏரியின் அருகேஇந்த விபத்து நடந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+