பொள்ளாச்சி அருகே கள்ள நோட்டு வைத்திருந்த பெண், 5 பேர் கைது
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே கள்ள 100 ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்த ஒரு பெண் உள்பட 6 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
தமிழகத்தில் சமீப காலத்தில் கள்ள நோட்டுக்கள் புழக்கம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இது தொடர்பாகஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பொள்ளாச்சி அருகே கப்பலாங்கரை என்ற ஊரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பைக்கில் வந்து கொண்டிருந்த இரண்டு பேர் நிற்காமல் வெகு வேகமாகச் சென்றனர். உடனடியாகஜீப்பில் அவர்களைத் துரத்திய போலீசார் அந்த இரண்டு பேரையும் வளைத்துப் பிடித்தனர்.
பின்னர் அந்த நபர்கள் வந்த பைக்கைச் சோதனையிட்ட போது அதில் ரூ.5,000 மதிப்புக்கு 100 ரூபாய் கள்ளநோட்டுக்கள் இருந்ததை அப்போது போலீசார் கண்டுபிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் ரூ.80,000க்கு 100 ரூபாய் கள்ள நோட்டுக்கள் வைத்திருந்ததாகவும்மீதமுள்ள ரூ.75,000க்கான கள்ள நோட்டுக்கள் இருக்கும் இடம் குறித்து அந்நபர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
அவர்களைக் கைது செய்த போலீசார் அங்குள்ள ஒரு வீட்டில் நடத்திய அதிரடிச் சோதனையில் அனைத்துக் கள்ளநோட்டுக்களும் பிடிபட்டன. அவற்றைப் போலீசார் கைப்பற்றினர்.
பின்னர் அந்த வீட்டிலிருந்த ஒரு பெண் உள்பட நான்கு பேரைக் கைது செய்தனர்.
இச்சம்பவத்தில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் உள்பட மேலும் 5 பேரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications