ஓடும் பஸ் மீது துப்பாக்கியால் சுட்ட நரிக்குறவர்
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு அருகே ஓடும் பஸ் மீது துப்பாக்கியால் சுட்ட ஒரு நரிக்குறவரைப் போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூரிலிருந்து வேலூருக்கு ஒரு அரசு பஸ் இரவில் சென்று கொண்டிருந்தது. சேத்துப்பட்டு அருகேஉலகம்பட்டு மற்றும் செம்மாம்பாடிக்கு இடையே பஸ் வந்து கொண்டிருந்த போது யாரோ ஒருவன் அந்த பஸ் மீதுதுப்பாக்கியால் சுட்டு விட்டு ஓடி விட்டான்.
இதில் டிரைவர் மதிவாணனின் காலில் குண்டு பாய்ந்தது. பலத்த குண்டுக் காயம் அடைந்த டிரைவர் உடனடியாகப்பாதுகாப்புடன் பஸ்சை நிறுத்தினார்.
படுகாயத்துடன் துடித்துக் கொண்டிருந்த டிரைவர் உடனடியாக சேத்துப்பட்டில் உள்ள ஒரு தனியார்அருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதற்கிடையே துப்பாக்கியால் சுட்ட மர்ம மனிதனைப் பிடிக்க தனிப் போலீஸ் படை அமைக்கப்பட்டது.
இவர்களுடைய தீவிர விசாரணையில் பஸ் மீது துப்பாக்கியால் சுட்டவன் ஒரு நரிக்குறவன் என்று தெரிய வந்தது.இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்திய பாளையம் சிங் (50) என்ற நரிக்குறவனைப் போலீசார் கைது செய்தனர்.
முயல் வேட்டைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த போது பஸ்சின் விளக்கு வெளிச்சத்தால் கண் கூசியதாகவும்அதனால் சாலையோரம் இருந்த மணலில் சாய்ந்த போது தோள்பட்டையில் மாட்டப்பட்டிருந்த துப்பாக்கி தவறாகவெடித்து பஸ் டிரைவர் மீது பாய்ந்து விட்டதாகவும் போலீசாரிடம் பாளையம் சிங் கூறினான்.
பின்னர் அவன் போளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். அவனை 15 நாள் காவலில் வைக்க நீதிபதிஉத்தரவிட்டார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications