தற்கொலைக்கு முயன்ற திருவாவடுதுறை துணை மடாதிபதி: வாரிசு போட்டியால் குழப்பம்?
திருவாவடுதுறை:
திருவாவடுதுறை ஆதீனத்தைக் கொலை செய்ய சிலர் முயற்சித்து தோல்வியடைந்த நிலையில் அதன் துணைமடாதிபதி நேற்று மாலை அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருவாவடுதுறையில் திருக்கயிலாய பரம்பரை ஆதீனம்அமைந்துள்ளது. 14ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இதன் 23வது குருமகா சன்னிதானமாக சிவப்பிரகாச தேசிகபரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார்.
புகழ்பெற்ற திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கோவில்கள் மற்றும்சொத்துக்கள் உள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கமான பூஜையில் கலந்து கொண்டு விட்டு, பக்தர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தார் சிவப்பிரகாச சுவாமிகள்.
அந்த சமயத்தில் அவருடைய மெய்க்காப்பாளரான வரதராஜன் மாடியில் உள்ள மடாதிபதியின் படுக்கையறைக்குச்சென்ற போது, அந்த அறையின் அருகே அடையாளம் தெரியாத நான்கு பேர் நின்று கொண்டிருந்ததைப் பார்த்துஅவர் திடுக்கிட்டார்.
உடனே அவர் போட்ட சத்தத்தைக் கேட்டு அந்த நான்கு பேரும் வேகமாகத் தப்பி ஓடி மறைந்து விட்டனர்.அவர்கள் ஓடுவதற்கு முன் அந்த அறைக்கு அருகிலேயே விஷ ஊசி, தலையணை, கையுறைகள் மற்றும் கயிறுஆகியவற்றைப் போட்டு விட்டு ஓடியுள்ளனர்.
இவற்றையெல்லாம் பார்த்து மேலும் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், உடனடியாகப் போலீசாருக்குத் தகவல்கொடுத்தனர். மோப்ப நாயுடன் விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
சிவப்பிரகாச சுவாமிகள் படுக்கையறைக்கு வந்தவுடன் அவரைக் கொலை செய்வதற்காகத் தான் அந்நபர்கள்வந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அவர்கள் தப்பிச் சென்ற கார் ஒரு வக்கீலுக்குச் சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.
தப்பியோடிய அந்த நான்கு பேரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், நேற்று மாலை அம்மடத்தின்துணை மடாதிபதியான காசி விஸ்வநாத தேசிக பரமாச்சாரியார் திடீரென்று சுமார் 40 தூக்க மாத்திரைகளைச்சாப்பிட்டு தற்கொலை செய்ய முயன்றார்.
இதையடுத்து அவர் உடனடியாக மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
திருவாவடுதுறை மடாதிபதி பதவியைக் கைப்பற்றுவதற்காக இந்தத் துணை மடாதிபதி தான் ஆதீனத்தைக் கொலைசெய்ய ஆட்களை ஏவி விட்டதாகவும் அம்முயற்சி தோல்வியடைந்ததால் அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும்கூறப்படுகிறது.
வாரிசுப் போட்டி காரணமாக ஏற்பட்டுள்ள இந்த இரு சம்பவங்களையும் தொடர்ந்து திருவாவடுதுறை மடத்தில்பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications