தமிழகம் முழுவதும் சாலை மறியல்: 2,000 மதிமுகவினர் கைது- போக்குவரத்து பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்:

தமிழகம் முழுவதும் மதிமுகவினர் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து இன்றும் இரண்டாயிரத்துக்கும்மேற்பட்ட மதிமுக தொண்டர்கள் கைதாகியுள்ளனர்.

இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தென் மாவட்டங்களில் மதிமுகவினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகரிலும், வைகோவின் சொந்த ஊரானசிவகாசியிலும் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் திடீர் சாலை மறியல் போராட்டங்கள் நடந்து வருகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 350மதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை கலெக்டர் அலுவலகத்தின் எதிரே இன்று காலை மதிமுக தொண்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 120 பேர்கைது செய்யப்பட்டனர்.

பழனி, மேலூர், திண்டுக்கல் ஆகிய இடங்களிலும் திடீர் சாலை மறியல்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த ஊர்களிலும்நூற்றுக்கணக்கான மதிமுகவினர் கைதாகியுள்ளனர்.

திருநெல்வேலியில் தாலுகா அலுவலகத்தை நூற்றுக்கணக்கான மதிமுகவினர் முற்றுகையிட்டனர். அவர்களில் 88 பேரை போலீசார் கைதுசெய்தனர். திருநெல்வேலியின் சுற்றுப் பகுதி கிராமங்களிலும் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டங்கள் நடந்தன. இதனால் அந்தப்பகுதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 240 பேர் கைதாகியுள்ளனர்.

சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் சாலை மறியல் மற்றும் தர்ணா போராட்டங்களில் மதிமுகதொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் கைதானவர்களின் எண்ணிக்கையை தர போலீசார் மறுத்துவிட்டனர்.

கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு மதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.கோயம்புத்தூரில் மட்டும் 800 மதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோட்டில் 400 பேரும் நீலகிரியில் 15 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே போல பொள்ளாச்சி, மேட்டுப்பாளையும், திருப்பூர், உடுமலைப்பேட்டை, பெரியநாயக்கன் பாளையம் ஆகிய இடங்களில் மதிமுகதொண்டர்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுளளனர்.

பாண்டிச்சேரியில்...:

அதே போல பாண்டிச்சேரியில் கண்டனப் பேரணி நடத்த முயன்ற 100 மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். கட்சியின் மாநில நிர்வாகிகள்பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் தமிழகத்திலும் பாண்டிச்சேரியிலும் மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் வன்முறை ஏதும் நடக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+