ஈழத் தமிழர்களுக்காக சிறை சென்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்: சிறையிலிருந்து வைகோ அறிக்கை
மதுரை:
ஈழத் தமிழர்களுக்காக சிறை சென்றதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இன்று அதிகாலையில் சிறிது நேரம் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த வைகோ தனது வழக்கறிஞர் ஆசைத்தம்பி மூலம் அவர்வெளியிட்ட அறிக்கை விவரம்:
பொடா சட்டத்தை அரசியல் பழி வாங்கலுக்காக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள். இந்தச் சட்டத்தையே அவரக்தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
ஆனாலும் ஈழத் தமிழர்களுக்காக சிறை சென்றதில் பெருமை அடைகிறேன்.
வரும் 15ம் தேதி நடக்கும் இந்திய ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வேன்.
எனது கட்சியினர் அமைதியான முறையில் இந்த கைதை எதிர்த்து போராட்டம் நடத்துவார்கள் என்று அதில் வைகோ கூறியுள்ளார்.
மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரமில்லை:
வைகோவின் வழக்கறிஞர் ஆசைத்தம்பி நிருபர்களிடம் கூறுகையில், பொடா சட்டத்தை தமிழக அரசு கையாண்ட விதமே தவறு. இந்தச்சட்டத்தின்படி ஒரு சிறப்பு நீதிமன்றம் தான் கைது வாராண்டை பிறப்பிக்க முடியும். வழக்கமான நீதிமன்ற மாஜிஸ்திரேட் வாரண்ட் பிறக்கஅதிகாரமே இல்லை.
அதே போல இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக எஸ்.பி. அளவிலான மூத்த போலீஸ் அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். ஆனால்,வைகோ விஷயத்தில் இள நிலை அதிகாரி தான் பொடா வழக்கு பதிவு செய்து விசாரித்துள்ளார் என்றார்.
ஸ்பெஷல் ரூம் தேவையில்லை...
சிறையில் உங்களுக்கு சிறப்பு வசதிகள் கொண்ட அறை வேண்டுமா என்று மாஜிஸ்திரேட் கேட்டபோது, தனக்கு அந்த அறை வேண்டாம்என வைகோ கூறிவிட்டார்.
ஒரு எம்.பி என்ற முறையில், நாட்டுக்கு வருமான வரி செலுத்தும் குடிமகன் என்ற வகையில் எந்த சிறையை ஒதுக்குவீர்களோ அதைத்தரலாம் என்றார்.
ஆனாலும், வைகோவை சிறப்பு அறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications