மதுரை.. வேலூர்.. மீண்டும் மதுரை..மீண்டும் வேலூர்: போலீஸ் வேனில் அலைகழிக்கப்பட்ட வைகோ
மதுரை:
வைகோவை எந்தச் சிறையில் அடைப்பது என்பதில் போலீசார் பெரும் குழப்பம் செய்தனர்.
சென்னையில் இருந்து போலீசாருக்கு மாறி மாறி உத்தரவுகள் வந்ததால் மதுரை சிறையில் அடைத்த சிறிது நேரத்தில் அங்கிருந்து வேலூர்சிறைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால், பாதி வழியில் மீண்டும் சென்னையில் இருந்து வேறு உத்தரவு வந்ததால் மீண்டும் மதுரை கொண்டு வந்தனர். பின்னர்அதிகாலையில் மீண்டும் அவரை வேலூர் சிறைக்குக் கொண்டு சென்றனர்.
நேற்று மாலையில் இருந்தே வைகோ மிக மோசமாக அலைகழிக்கப்பட்டார்.
நள்ளிரவு 2 மணிக்கு மதுரையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள திருமங்கலம் கொண்டு செல்லப்பட்ட வைகோ அங்கு நீதிபதி முன்ஆஜர்படுத்தப்பட்டார். அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து இரவு 3 மணியளவில் அவரை திருமங்கலத்தில் இருந்து மதுரை மத்திய சிறைக்குக் கொண்டு வந்தனர். மதுரை சிறைக்குள்கொண்டு சென்ற சிறிது நேரத்தில் சென்னையில் உயர் மடத்தில் இருந்து போலீசாருக்கு ஒரு உத்தரவு வந்தது. உடனே வைகோவை வேலூர்கொண்டு செல்லுமாறு உயர் மட்டத்தில் இருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து அதிகாலை 4 மணியளில் அவரை மீண்டும் போலீஸ் வேனில் ஏற்றிக் கொண்டு வேலூருக்குப் புறப்பட்டனர். ஆனால், 2 கி.மீ.தூரமே சென்ற நிலையில் மீண்டும் சென்னையில் இருந்து இன்னொரு உத்தரவு வந்தது. மீண்டும் அவரை மதுரை சிறைக்கே கொண்டுசெல்ல உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவரை மீண்டும் மதுரை சிறைக்குக் கொண்டு வந்தனர் போலீசார்.
அதிகாலையில் மதிமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வைகோ வரும் வேனைத் தடுக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டதால்அவரை மீண்டும் மதுரைக்குக் கொண்டு வந்ததாக போலீசார் கூறினர்.
பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் சென்னையில் உத்தரவு வந்தது. வைகோவை மீண்டும் வேலூர் கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டது.இதையடுத்து காலை 6 மணிக்கு மீண்டும் வைகோவை மதுரை சிறையில் இருந்து வெளியே அழைத்து வந்த போலீசார் வேலூர் கொண்டுசென்றனர்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications