வைகோ குடும்பம், நிருபர்களிடம் போலீசார் தொடர்ந்து கெடுபிடி
சென்னை:
சென்னையிலும் மதுரையிலும் வைகோவை சந்திக்க விடாமல் அவரது குடும்பத்தினரையும் பத்திரிக்கையாளர்களையும் போலீசார்தடுத்தனர்.
சென்னையில் நேற்று வைகோவைச் சந்திக்க வந்த அவரது மனைவி, மகன், சகோதரி ஆகியோரை முதலில் போலீசார் அனுமதிக்கவில்லை.அவர்களை காரை கிண்டி அருகிலேயே தடுத்து நிறுத்திய போலீசார் திருப்பி அனுப்பிவிட்டனர்.
எவ்வளவோ வாதாடியும் அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து வீட்டுக்குத் திரும்பிய அவர்கள் உயர் அதிகாரிகளுடன்தொடர்பு கொண்டு பேசினர். இதன் பின்னர் தான் அவர்கள் மீண்டும் விமான நிலையத்துக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், விமான நிலையத்துக்குள் செல்ல வைகோவின் தாயாருக்கு அனுமதி தர போலீசார் மறுத்துவிட்டனர். இதனால் அவர் காரிலேயேஅமர்ந்திருந்தார்.
அதே போல நிருபர்களையும் போலீசார் வதைத்து எடுத்தனர். வைகோ வெளியே வந்தபோது அதைப் படம் எடுத்த தொலைக்காட்சியின்கேமராமேனை ஒரு போலீஸ்காரர் அடித்தார். இதனால் எரிச்சலடைந்த பத்திரிக்கையாளர்கள் அவரை விரட்டிச் சென்றனர். அவரைப்பிடித்து உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், அவர் தப்பியோடி விமான நிலையத்துக்குள் சென்று பதுங்கிக் கொண்டார். இதையடுத்து உயர் அதிகாரிகள் ஓடிவந்துபத்திரிக்கையாளர்களை சமாதானப்படுத்தினர்.
நிருபர்களிடம் வைகோ பேசிக் கொண்டிருந்தபோதே அவரைத் தள்ளிச் சென்று வேனில் ஏற்றினர். இதையடுத்து ஜெயலலிதாவின் பாசிஸஅரசு ஒழிக என்று கோஷம் போட்டார்.
இன்றும் தொல்லை...
இன்றும் போலீசார் தொல்லை மிக அதிகமாக இருந்தது. மதுரையில் இருந்து வேலூர் கொண்டு செல்லப்பட்ட வைகோவைச் சந்திக்கபத்திரிக்கையாளர்களை போலீசார் அனுமதிக்கவில்லை.
பத்திரிக்கையாளர்களை சந்திக்க விட வேண்டாம் என தங்களுக்கு சென்னையில் உயர் மட்டத்தில் இருந்து உத்தரவு வந்ததாக போலீசார்தெரிவித்தனர்,
முன்னதாக திருமங்கலம் நீதிபதியின் வீட்டையே போலீசார் கோட்டை மாதிரி காவல் காத்து நின்றனர். உள்ளே நுழையபத்திரிக்கையாளர்களை அனுமதிக்கவில்லை.
போட்டோ மட்டும் தான் எடுக்கலாம், பிரஸ் மீட்டுக்கு அனுமதிக்க மாட்டோம் என மதுரை போலீஸ் கமிஷ்னர் சூர்ய பிரசாத் கூறினார்.
வைகோவைச் சந்திக்க அவரது வழக்கறிஞர்களைக் கூட கமிஷ்னர் அனுமதிக்கவில்லை. இது எங்கள் உரிமை என வழக்கறிஞர்கள் உரத்தகுரலில் சத்தம் போட்ட பிறகு தான் கமிஷ்னர் அடங்கினார்.
வைகோ உயிரோடு தான் இருக்கிறாரா? அவர் உடல் நிலை எப்படி உள்ளது என்பதை அறிய எனக்கு உரிமை உண்டு. நேற்றிலிருந்துபோலீஸ் வேனில் வைத்து அவரை வதைத்துக் கொண்டுள்ளீர்கள் என்று வழக்கறிஞர் ஆசைத்தம்பி கமிஷ்னரை நோக்கி கத்திய பிறகு தான்சரி, யாராவது 2 வழக்கறிஞர்கள் மட்டும் வைகோவை சந்திக்கலாம் என்றார்.
சிகாக்கோவில் மும்பை வந்தவுடன் சென்னை வந்து, உடனே மதுரைக்கு வேனில் வந்து மீண்டும் அங்கிருந்து வேலூருக்குச் சென்றுகொண்டுள்ளார் வைகோ. அவரது உடல் நிலையை பற்றி கொஞ்சம் கூடக் கவலைப்படாமல் அவரை போலீசார் இழுத்தடிப்பதாகவழக்கறிஞர்களும் மதிமுகவினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications