பொடா சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது: பா.ஜ.க.
டெல்லி:
மதிமுக பொதுச் செயலாளார் வைகோவைக் கைது செய்ய பொடா சட்டம் மிகத் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதாகட்சியின் தலைவர் வெங்கைய்யா நாயுடு கூறினார்.
நிருபர்களிடம் பேசிய அவர், வைகோவைக் கைது செய்தது தேவையில்லாதது, அநாவசியமானது என்றார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் பாதுகாப்பு அமைச்சருமான பெர்னாண்டஸ் இந்தக் கைது குறித்து வருத்தம்தெரிவித்துள்ளார். பாட்னாவில் நிருபர்களிடம் பேசிய அவர், இது மிகவும் துரதிஷ்டவசமானது.
இந்தக் கைது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் தேசிய ஜனநாயக முன்னணி விவாதிக்காது என்றார் பெர்னாண்டஸ்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட முடியாது என உள்துறை இணையமைச்சர் ஐ.டி.சாமி கூறியுள்ளார்.
இந் நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க வேண்டுமானால் நீதிமன்றத்தின் அனுமதியை வைகோ பெற வேண்டும் எனதேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications