வைகோ வேலூர் சிறையில் அடைப்பு
வேலூர்:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
நேற்று சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேன் மூலம் இன்று அதிகாலை மதுரைகொண்டு செல்லப்பட்டார். அங்கு மாஜிஸ்திரேட் வசம் ஆஜர்படுத்தப்பட்ட அவர் அங்கிருந்து போலீஸ் வேனிலேயே வேலூர் கொண்டுசெல்லப்பட்டார்.
இந்த வேன் இன்று பிற்பகல் 3 மணிக்கு வேலூர் மத்திய சிறைச்சாலையை அடைந்தது. அங்கு வைகோ அடைக்கப்பட்டார்.
அவர் ஆகஸ்ட் 7ம் தேதி வரை 28 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார். இதன் பின்னர் தான் அவர் ஜாமீன் கோர முடியும்.
பரோல் கோரி வழக்கு:
இந் நிலையில் வரும் 15ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க சிறையில் இருந்து பரோலில் வெளியே வர வைகோவுக்குஅனுமதி தர வேணடும் என்று கோரி வைகோவின் வழக்கறிஞர் மாசிலாமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ஒரு மனு தாக்கல்செய்துள்ளார்.
தடா நீதிமன்றம் விசாரிக்கும்:
இதற்கிடையே பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வைகோ உள்ளிட்ட 9 பேர் மீதான வழக்கு விசாரணைகளை தடா நீதிமன்றங்கள்விசாரிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி தந்துள்ளது.
முன்னதாக தமிழகத்தில் பொடா நீதிமன்றங்கள் இன்னும் அமைக்கப்படாததால் அதை தடா நீதிமன்றங்களிலேயே விசாரிக்க அனுமதி தரவேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்துக்கு தமிழக அரசு ஒரு கடிதம் எழுதியது.
இந்தக் கடிதத்தைப் பரிசீலித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, பொடா வழக்குகளை தனி நீதிமன்றங்கள்மட்டும் தான் விசாரிக்க வேண்டும். தமிழகத்தில் இன்னும் பொடா வழக்குகளுக்கு என தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படாததால், இந்தவழக்குகளை ஏற்கனவே உள்ள தடா நீதிமன்றங்களிலேயே விசாரித்துக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் தடா நீதிமன்றங்கள் உள்ளன. இந்த நீதிமன்றங்களில் வைகோமற்றும் பிற மதிமுகவினரின் வழக்குகள் விசாரிக்கப்பட உள்ளன.
விரைவில் உயர் நீதிமன்றத்தில் வைகோ வழக்கு:
இந் நிலையில் வைகோவைக் கைது செய்ய திருமங்கலம் மாஜிஸ்திரேட் பிறப்பித்த வாரண்டும், சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவும்பொடா சட்டத்தின் கீழ் செல்லாது என வைகோவின் வழக்கறிஞர் கூறியுள்ளார். இதை தனி நீதிமன்ற நீதிபதி தான் பிறப்பித்திருக்கவேண்டும். இந்த நீதிபதி பிறப்பித்தது செல்லாது. எனவே, சென்னை உயர் நீதிமன்றதில் இதையே காரணமாகக் காட்டி வைகோவைவிடுவிக்கக் கோருவோம் என்றார்.
முன்னதாக மதுரை நீதிபதிகள் குடியிருப்பில் மாஜிஸ்திரேட் வனிதாவின் வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்ட வைகோ இதைமாஜிஸ்திரேட்டிடம் கூறினார். எனக்கு எதிரான இந்த வாரண்ட் செல்லாது. பொடா சட்டத்தின் 25வது பிரிவின் கீழ் வழக்கமானநீதிமன்றங்கள் ஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரண்ட்டை பிறப்பிக்க முடியாது, மேலும் கைது செய்யப்பட்டவரை சிறையில்அடைக்கவும் வழக்கமான நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றார்.
ஆனால், வைகோவின் வாதங்களை நிராகரித்த நீதிபதி அவரை ஆகஸ்ட் 7ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
28 நாள் சிறை வாசத்துக்குப் பின்னர் தான் இனி வைகோ ஜாமீன் கோர முடியும். அவருக்கு ஜாமீன் தருவதா இல்லையா என்று நீதிமன்றம்முடிவு செய்யும்
| |||||||||||||||||||












Click it and Unblock the Notifications