பள்ளி மாணவியை விபச்சாரத்தில் தள்ளியவன் மண்டை, மீசையை மழித்து அடி- உதை
ஈரோடு:
இளம் பெண்ணைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய நபருக்கு பொது மக்கள் வினோதமான தண்டனை தந்தனர். அவரது தலையை பாதிமொட்டையடித்த மக்கள் ஒரு பக்க மீசையையும் மழித்தனர். பின்னர் அவரை அடித்து உதைத்தனர்.
ஈரோட்டைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகள் வசந்தி. 16 லயதான இந்தப் பெண் 8ம் வகுப்பு படித்து வந்தார். மிகவும் ஏழ்மையானநிலையில் கூலி வேலை செய்து வந்த சுப்பிரமணியால் குடும்பம் நடத்த முடியவில்லை.
இந் நிலையில் மாதேஸ்வரன் என்பவர் சுப்பிரமணிக்கு அறிமுகமானார். சுப்பிரமணிக்கும், அவரது மனைவி மற்றும் வசந்திக்கும் வேலைவாங்கித் தருவதாகக் கூறி அவர்களை மாதேஸ்வரன் சேலத்துக்கு அழைத்துச் சென்றார். இதனால் படிப்பைவிட்டுவிட்டு வசந்தியும் சேலம்சென்றார்.
சேலத்தில் அவர்களை ஓரிடத்தில் தங்க வைத்த மாதேஸ்வரன், பின்னர் வசந்தியை மட்டும் தனியாக அழைத்துக் கொண்டு வேலையில்சேர்த்துவிடுதாகக் கூறி கொண்டு சென்றான். நேராக அந்தப் பெண்ணை வச்சாத்தி பகுதிக்குக் கொண்டு சென்ற மாதஸ்ேவரன் அங்குஒதுக்குப்புறமான ஒரு வீட்டில் அடைத்து வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றார். ஆனால், விபச்சாரம் செய்ய வசந்தி மறுத்துவிட்டார்.
இதனால் அந்தப் பெண்ணை அடித்தும், சூடு போட்டம் துன்புறுத்தினார். இது குறித்து தகவல் தெரிந்து அப் பகுதி மக்கள் கண்டித்ததால்அந்தப் பெண்ணை அங்கிருந்து அழைத்துக் கொண்டு பல ஊர்களுக்கும் சென்றான்.. இறுதியில் மதுரைக்குக் கொண்டு சென்று ஒரு வீட்டில்அடைத்து வைத்து வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தினான்.
6 மாதங்கள் அவனது பிடியில் சிக்கியிருந்த வசந்தி சமீபத்தில் அவனிடம் இருந்து தப்பி ஈரோடுக்கு வந்தார். தனது பெற்றோரிடம் தனக்குநடந்த கொடுமையைச் சொல்லி அழுதார்.
இந் நிலையில் வசந்தியை மீண்டும் இழுத்துச் செல்ல மாதேஸ்வரனும் ஈரோட்டுக்கு வந்தான். அவனுடன் செல்ல வசந்தி மறுத்தார். அவளதுஏழைப் பெற்றோரும் மாதஸ்ேவரனிடம் தங்கள் மகளை விட்டுவிட்டுப் போய்விடும்படி கெஞ்சினர். ஆனால், அப்போதைக்குப்போய்விட்ட மாதேஸ்வரன் தினமும் குடித்துவிட்டு வந்து வசந்தியின் வீட்டில் கலாட்டா செய்தான்.
ஒரு வேளை உணவுக்கே கஷ்டப்பட்ட அந்தக் குடும்பத்தினரால் மாதேஸை எதிர்த்து நிற்க முடியவில்லை.
அவனது தொல்லை மிகவும் அதிகமானதால் அந்தப் பகுதி மக்களிடம் வசந்தியின் பெற்றோர் தங்கள் மகளுக்கு நேர்ந்த கொடுமையையும்தங்களை மாதேஸ்வரன் மிரட்டுவதையும் கூறி உதவி கோரினர்.
இந் நிலையில் மாதேஸ் வழக்கம்போல் குடித்துவிட்டு வந்து வசந்தி வீட்டுக்குள் புகுந்தான். சந்தர்ப்பம் தேடி காத்திருந்த அந்தப் பகுதி மக்கள்அவனை இழுத்து ரோட்டுக்குக் கொண்டு வந்தனர். அவனை குண்டக்க மண்டக்க அடித்து உதைத்தனர். பெண்கள் விளக்குமாறுகளால்அடிக்க, ஆண்கள் செருப்புகளால் அடித்தனர்.
அந்தப் பகுதி சிறுவர்கள் கூட அவன் மீது கல்வீசித் தாக்கினர். பின்னர் மக்கள் அவனை ஒரு மரத்தில் கட்டி அடி பின்னி எடுத்தனர்.தொடர்ந்து அவனது வலது பக்க மண்டையில் முடி மழிக்கப்பட்டது. இடது பக்க மீசையும் மழிக்கப்பட்டது.
தொடர்ந்த விழுந்த அடியால் அவன் மயங்கினான். இந் நிலையில் இது குறித்துத் தகவல் அறிந்த போலீசார் ஓடி வந்து அவனை பொதுமக்களிடம் இருந்து மீட்டனர்.
பின்னர் நடந்த சம்பவத்தைக் கேட்டு போலீசாரும் அவர்கள் பங்குக்கு அவனுக்கு அடி கொடுத்து காவல் நிலையத்துக்கு இழுத்துச்சென்றனர்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications