க்யூ பிராஞ்ச் வசம் வைகோ வழக்கு
மதுரை:
வைகோ உள்பட 9 மதிமுகவினர் மீதான பொடா வழக்கு க்யூ பிராஞ்ச் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திருமங்கலம் காவல் நிலைய போலீசார் தான் முதலில் இந்த வழக்குகளைப் பதிவு செய்து எப்.ஐ.ஆர். தாக்கல் செய்தனர். பின்னர்வைகோவையும் மற்ற 8 பேரையும் கைது செய்ய நீதிபதியிடம் வாரண்ட் பெற்றனர். கைது செய்து சிறையில் அடைப்பது வரைதிருமங்கலம் போலீசார் தான் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தனர்.
இப்போது இந்த வழக்கு விசாரணை க்யூ பிராஞ்ச் எனப்படும் தமிழக போலீசின் சிறப்பப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.தீவிரவாதிகள், குண்டுவெடிப்புகள் ஆகிய விவகாரங்களை இந்த க்யூ பிராஞ்ச் போலீசார் தான் கவனித்து வருகின்றனர்.
இவர்கள் தான் இனி வைகோ உள்ளிட்ட 9 பேர் மீதான பொடா வழக்கை விசாரிப்பார்கள். மதுரை க்யூ பிராஞ்ச் டி.எஸ்.பி. மகேந்திரன்,இன்ஸ்பெக்டர் மரகத சுந்தரம் ஆகியோர் தான் இதில் விசாரணை அதிகாரிகளாக இருந்து வழக்கை கையாள்வார்கள்.
தமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டம், தமிழ் தேசியப் படை, தமிழ் தேசிய மீட்சிப் படை ஆகியவற்றையும் கண்காணித்து வந்ததும்,வருவதும் க்யூ பிராஞ்ச் தான்.












Click it and Unblock the Notifications