சத்தமில்லாமல் காவிரியில் தண்ணீர் விட்ட கர்நாடகம்

Subscribe to Oneindia Tamil

மைசூர்:

தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று கபினி அணையிலிருந்து 16,000 கன அடி நீரை தமிழகத்திற்கு கர்நாடகஅரசு திறந்து விட்டுள்ளது. அம்மாநிலத்தில் இதற்குக் கடும் எதிர்ப்பு இருக்கும் என்பதால் தண்ணீர்திறந்துவிடவில்லை என்று கூறி வருகிறது.

தமிழகத்திற்கு காவிரியில் தினமும் 1.25 டி.எம்.சி. நீரைத் திறந்துவிட வேண்டும் என்று கடந்த மாதம் 3ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 8ம் தேதி கூடிய காவிரி நதி நீர் ஆணையம் தமிழகத்திற்கு காவிரியிலிருந்துதினமும் 0.8 டி.எம்.சி. நீரைத் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால் கர்நாடக அரசு இந்த இரண்டு உத்தரவுகளையுமே மதிக்கத் தவறி விட்டது. கபினி அணையிலிருந்துதிறந்துவிட்டுக் கொண்டிருந்த நீரையும் திடீரென்று நிறுத்திவிட்டது.

முதல் வழக்கு:

இதையடுத்து கர்நாடக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவமதிப்பு வழக்கு ஒன்றைத்தொடர்ந்தது.

இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, அம்மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர்பாட்டீல், தலைமைச் செயலாளர் ரவீந்திரா, நீர்ப்பாசனத்துறை செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறை தலைமைப்பொறியாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

"உங்களுக்கு எதிராக ஏன் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது?" என்று நேரடியாகக் கேட்டே அவர்களுக்குஉச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீஸ்களுக்கு பதிலளிக்கும் வகையில் கடந்த வாரம் கிருஷ்ணா உள்ளிட்ட ஐந்து பேரும் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுக்களைத் தாக்கல் செய்தனர். காவிரிப் பிரச்சனை தொடர்பான வழக்கு இன்னும்நிலுவையில் உள்ளதால், இவ்விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று அவர்கள் தங்கள் மனுவில்குறிப்பிட்டிருந்தனர்.

மீண்டும் மீறிய கர்நாடகம்:

இந்நிலையில் தமிழகத்திற்கு காவிரியில் தினமும் 0.8 டி.எம்.சி. (9,000 கன அடி) நீரைத் திறந்து விட வேண்டும்என்று கடந்த வெள்ளிக்கிழமை கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது.

ஆனால் உச்ச நீதிமன்றத்தின் இந்தப் புதிய உத்தரவையும் கர்நாடக அரசு மீறியது. தமிழகத்திற்கு கர்நாடகஅணைகளிலிருந்து நீர் திறந்து விடவே முடியாது என்று கிருஷ்ணா உறுதியாக அறிவித்து விட்டார்.

இதையடுத்து கர்நாடக அரசுக்கு எதிராக மீண்டும் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று கடந்த சனிக்கிழமைஜெயலலிதா அறிவித்தார். நேற்று சென்னையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இது தொடர்பான இறுதிமுடிவு எடுக்கப்பட்டது.

2வது வழக்கு:

இதையடுத்து, கர்நாடக அரசுக்கு எதிராக இன்று மீண்டும் ஒரு அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தமிழகஅரசு தொடர்ந்துள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,

தமிழகத்திற்கு காவிரியில் தினமும் 9,000 கன அடி நீரைத் திறந்துவிட வேண்டும் என்று கடந்த 4ம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவை கர்நாடக அரசு மீறிவிட்டது.

இந்த உத்தரவை மதிக்கத் தவறிய கர்நாடக முதல்வர், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர்ஆகியோருக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் காவிரியில் நீர் திறந்துவிடப் படாததால் தமிழக விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பைச் சரிக்கட்டும்வகையில் அவர்களுக்கு கர்நாடக அரசு நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என்று அம்மனுவில்தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

அவமதிக்கும் சட்ட அமைச்சர்:

நூறு அவமதிப்பு வழக்குகள் போட்டாலும் சந்திப்போம் என கர்நாடக சட்ட அமைச்சர் சந்திரே கெளடா நேற்று உச்ச நீதிமன்றத்துக்கே சவால் விட்டதுகுறிப்பிடத்தக்கது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+