சிறையில் பேன் வழங்க ஜெ. உத்தரவு: ஏற்க வைகோ மறுப்பு
சென்னை:
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோவுக்கு பேன், சில்வர் தட்டு, சில்வர் டம்ளர் தர முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டதாகவும் ஆனால் அதைப் பயன்படுத்த வைகோ மறுத்துவிட்டாகவும் மாஜி முதல்வரும் பொதுப் பணித்துறைஅமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இந்த விஷயத்தில் தமிழக அரசைக் குறை கூறுவது சரியல்ல என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பாக ஓ.பி. வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
புலிகளை ஆதரித்த குற்றத்துக்காக வேலூர் சிறையில் வைகோ அடைக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், ஏதோதமிழக அரசால் வைகோ பழிவாங்கும் மனப்பான்மையுடன் நடத்தப்படுகிறார் என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தைநாளிதழ்களும், பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் உருவாக்க முயற்சித்து வருகின்றன.
இது உண்மைக்கு மாறானது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். திமுக தலைவர் கருணாநிதி உள்பட சிலர், சிறையில் வைகோபழிவாங்கப்படும் விதத்தில் தமிழக அரசால் நடத்தப்படுகிறார் என கூறியுள்ளதாக செய்திகள் வருகின்றன. அவருக்கு மின் விசிறிதரப்படவில்லை என்பதை குறையாகவும் கூறியுள்ளார்கள்.
உண்மையில் வேலூர் சிறையில் வைகோவுக்கு பேன் வழங்க சிறை விதிகளில் இடமில்லை. அங்கு இதுவரை எந்தக் கைதிக்கும்மின் விசிறி தரப்பட்டதில்லை.
இந் நிலையில் பத்திரிக்கைகளில் வந்த செய்திகளைப் பார்த்த முதல்வர் உடனடியாக வைகோவுக்கு பெடஸ்டல் பேன் அளித்திடஉத்தரவிட்டார். நேற்று காலையே அவரது அறைக்கு பேன் எடுத்துச் செல்லப்பட்டது.
ஆனால், அதைப் பயன்படுத்த வைகோ மறுத்துவிட்டார். சிறையில் மற்ற கைதிகளுக்கு இந்த வசதி தரப்படாததால் எனக்கும் இந்தவசதி வேண்டாம் என்று கூறிவிட்டார். இப்போதும் அந்த பேன் வைகோவின் அறைக்குப் பக்கத்தில் தான் வைக்கப்பட்டுள்ளது.
எனவே, இதில் அரசு வேண்டுமென்றே மின் விசிறி வழங்கவில்லை என்பது போன்ற குற்றச்சாட்டில் எந்தவிதமான ஆதாரமும்இல்லை. மேலும் வைகோவுக்கு சிறையில் சிறப்பு வகுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அவர் உணவருந்த எவர்சில்வர் தட்டை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், அவர் பிற கைதிகளைப் போலவே அலுமினியத்தட்டை பயன்படுத்திக் கொள்வேன் என்று கூறிவிட்டார்.
இவ்வாறு பன்னீர் கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications