உசிலம்பட்டி அருகே மூட்டை மூட்டையாக கஞ்சா பறிமுதல்
உசிலம்பட்டி:
உசிலம்பட்டி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் ஒரு காரில் மூட்டை மூட்டையாகக் கடத்திச்செல்லப்பட்ட 15 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்து தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு ஏராளமான அளவில் கஞ்சாகடத்தப்படுவதாகப் போலீசாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து உசிலம்பட்டியைச் சுற்றிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சேக்கிழார்பட்டி அருகே போலீசாரைக் கண்டதும் ஒரு கார் நிற்காமல் செல்ல முயற்சித்தது. ஆனால்போலீசார் உடனடியாகச் சுதாரித்துக் கொண்டு அந்தக் காரைச் சுற்றி வளைத்தனர்.
அந்தக் காரை சோதனையிட்ட போது அதில் மூட்டை மூட்டையாகக் கஞ்சா கடத்தப்பட்டுக் கொண்டிருப்பதைப்போலீசார் கண்டுபிடித்தனர். சுமார் 15 கிலோ எடை கொண்ட அந்தக் கஞ்சாவின் விலை சர்வதேசச் சந்தையில் ரூ.15கோடியாகும்.
இதையடுத்து அந்தக் காரின் டிரைவர் உள்பட எட்டு பேரைப் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.












Click it and Unblock the Notifications