கலாம் பதவியேற்பில் 100 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தனது பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க 1,000 பள்ளி மாணவ- மாணவிகளை அனுமதிக்க வேண்டும் என ஜனாதிபதியாகபதவியேற்க உள்ள டாக்டர் அப்துல் கலாம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. நாடு முழுவதும் 90 சதவீத எம்.பி, எம்.எல்.ஏக்கள் இதில் வாக்களித்தனர்.தமிழக்ததில் 100 சதவீதம் வாக்களிப்பு நடந்தது. தமிழகத்தில் இருந்து வாக்குப் பெட்டி பலத்த பாதுகாப்புடன் இன்று காலைவிமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்பட்டது.

அதே போல நாடு முழுவதும் இருந்தும் வாக்குப் பெட்டிகள் ஜனாதிபதி தேர்தலுக்கான அதிகாரி திரிபாதியிடம்ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

இந்த வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை நடக்கும். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட கேப்டன் லட்சுமி செகலை அப்துல் கலாம்வெல்லப் போவது உறுதி. இதனால், பதவியேற்பு குறித்து அவருடன் மத்திய அரசு விவாதிக்க ஆரம்பித்துவிட்டது.

வரும் 25 ம் தேதி பகல் 12.30 மணிக்கு நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடக்கும் விழாவில் அப்துல் கலாம்ஜனாதிபதியாகப் பதவியேற்கிறார். இந் நிகழ்ச்சியைக் காண நாடு முழுவதும் இருந்தும் 1,000 பள்ளி மாணவ- மாணவிகளைடெல்லிக்கு அழைத்து வர வேண்டும் என அப்துல் கலாம் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இடம் இல்லை என்பதால் 100 மாணவ, மாணவிகளை மட்டும் இந் நிகழ்ச்சியில்பங்கேற்கச் செய்வதாக மத்திய அரசு கூறியுள்ளது.

அதே போல பதவியேற்பின் போது தனது வழக்கமான பேண்ட், சர்ட் உடையிலேயே இருப்பதாக அப்துல் கலாம் கூறியுள்ளார்.ஆனால், மத்திய அரசு கேட்டுக்கொண்டதால் ஜோத்பூர் பாணியிலான பாரம்பரிய குர்தா அணிய கலாம் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதற்கிடையே முதலில் ஜனாதிபதி பதவிக்கு தேசிய ஜனநாயக முன்னணியால் அறிவிக்கப்பட்டு கைவிடப்பட்ட மகாராஷ்டிரமுன்னாள் கவர்னர் பி.சி.அலெக்சாண்டர், காங்கிரஸ் கட்சியை கடும் வார்த்தைகளால் விளாசியுள்ளார். சமீபத்தில் தனது கவர்னர்பதவியை ராஜினாமா செய்த அவர் நேற்று முன்தினம் ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு மனு தாக்கல் செய்தார்.

அவரை ராஜ்யசபா எம்.பியாக்க சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், சிவசேனை, பா.ஜ.க. ஆதரவு தெரிவித்துள்ளன. அவரைஎதிர்த்து காங்கிரஸ் கட்சி சுயேச்சை வேட்பாளரை நிறுத்தியுள்ளது.

எம்.பியான பின்னர் அவருக்கு மத்திய அரசில் உயர் பதவி தரப்படும் என்று தெரிகிறது.

இந்திரா காந்தி, ராஜிவ் காந்தியுடன் நெருக்கமாக இருந்த என்னை ஜனாதிபதி பதவிக்கு ஆதரிக்காமல் காங்கிரஸ் கவிழ்த்திவிட்டதுஅதிர்சசியையும் வேதனையையும் தந்துள்ளது என்று அலெக்சாண்டர் கூறியுள்ளார்.

ஆனால், முதலில் காங்கிரஸ் ஆதரவாளராக இருந்துவிட்டு பின்னர் சிவசேனை, பா.ஜ.க. ஆதரவாளாக மாறியதால் அவரைஎதிர்த்தோம் என காங்கிரஸ் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+