மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம்: இன்று ஓட்டெடுப்பு
டெல்லி:
காஷ்மீரில் அப்பாவி மக்கள் 28 பேர் படுகொலை செய்யப்பட்டது குறித்து விவாதிக்கக் கோரி லோக்சபாவில் எதிர்க் கட்சிகள்கொண்டு வந்த ஒத்தி வைப்புத் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
விவாதத்துக்குப் பின் இந்தத் தீர்மானத்ன் மீது ஓட்டெடுப்பு நடக்கும். இதனால், தனது அனைத்து எம்.பிக்களையும் அவையில்இருக்குமாறு பாரதிய ஜனதா கட்சி உத்தரவிட்டுள்ளது.
அதே போல கூட்டணிக் கட்சிகளிடமும் எம்.பிக்களை அவையில் இருக்கச் செய்யக் கோரியுள்ளது.
கடந்த 13ம் தேதி ஜம்மூவில் காசிம்நகரில் அப்பாவித் தொழிலாளர்கள் 28 பேர் அவர்களது குடிசை வீடுகளின் முன் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது தொடர்பாக துணைப் பிரதமர் அத்வானி இன்று அறிக்கை தாக்கல் செய்தார்.
ஒவ்வொரு முறையும் தாக்குதலில் மக்கள் இறக்கும்போது அத்வானி அங்கு செல்வதும், பின்னர் திரும்பி வந்து அறிக்கை தாக்கல்செய்வதும் வழக்கமாகிவிட்டது. பின்னர் அடுத்த கொலைகள் நடக்கும் வரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லைஎன காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
இதையடுத்து ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வருவதாக காங்கிரஸ் துணைத் தலைவர் சிவராஜ் பாட்டீல் கூறினார். அவருக்குஆதரவாக 65 எம்.பிக்கள் நோட்டீஸ் கொடுத்தனர்.
எல்லை தாண்டிய தீவிரவாதத்தைத் தடுக்க மத்திய அரசு தவறிவிட்டதாக அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்தத் தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடத்தப்படுகிறது. இதன் பின்னர் இன்று மாலை இந்தத் தீர்மானத்தின் மீதுவாக்கெடுப்பு நடக்கும். இந்தத் தீர்மானத்தை எதிர்க் கட்சியினர் கொண்டு வந்தபோது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளபா,ஜ.க. ஆதரவு கட்சிகள் அதை எதிர்க்கவில்லை.
இந்த விவாதத்தில் பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி ஆகியோர் விளக்கம் தர உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications