பிளஸ் டூ உடனடி மறு தேர்வு முடிவுகள் அறிவிப்பு: 50 சதவீதம் தேர்ச்சி
சென்னை:
இந்த பிளஸ் டூ தேர்வில் ஒன்று, இரண்டு பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கு நடத்தப்பட்ட உடனடி மறுதேர்வில் 50 சதவீதம்பேர் தேர்ச்சியடைந்துள்ளது.
ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் தோல்வியடைந்தவர்கள் ஓராண்டை வீணாக்குவதைத் தடுக்க உடனடியாக மறு தேர்வுநடத்தும் திட்டம் தமிழக அரசால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. கல்வியமைச்சர் தம்பிதுரையின் யோசனையில் உருவானஇந்தத் திட்டத்துக்கு சுமாராகப் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களும் மாணவர்களும் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இத் திட்டத்தின்படி கடந்த மாதம் 26ம் தேதியும் 27ம் தேதியும் உடனடி மறு தேர்வுகள் நடந்தன. இந்தத் தேர்வு முடிவுகள் நேற்றுவெளியிடப்பட்டன. இதில் 50 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இதன்மூலம் இவர்கள் இந்த ஆண்டே கல்லூரிகளில் சேர்ந்துபடிப்பைத் தொடர்ந்துவிட முடியும.
இந்த மாணவர்களுக்கு வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்படும் தமிழகதேர்வுத்துறை இயக்குநர் பழனிவேலு கூறினார். அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் டூ பொதுத் தேர்வுகளில் ஓரிரு பாடங்களில் தோல்வியடைந்தமாணவ-மாணவிகள் அவற்றில் தேர்ச்சி பெற்று இந்த ஆண்டிலேயே தங்களுடைய மேற்படிப்பைத் தொடருவதற்குவசதியாகத் தான் இந்த உடனடி மறு தேர்வு நடத்தப்பட்டது.
இந்த உடனடி மறு தேர்வை 42,793 மாணவ-மாணவிக எழுதினார்கள்.
இவர்களில் 26,179 பேர் ஒரு பாடம் மட்டும் எழுதினார்கள். இவர்களில் 15,561 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இருபாடங்களை எழுதிய 16,614 மாணவ-மாணவிகளில் 6,001 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தத்தில் 50.39மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஹால் டிக்கெட் பெற்ற மையங்களில் மாணவ-மாணவிகள் தங்களுடைய தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். இதைத் தவிர பிளஸ் டூ பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்ட வெப்சைட்டுகள் மூலமாகவும்முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
இந்த உடனடி மறு தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவ-மாணவிகளுக்கு வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில்மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்படவுள்ளன. ஹால் டிக்கெட் பெற்ற மையங்களிலேயே இந்த மதிப்பெண்பட்டியல்களை மாணவ-மாணவிகள் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த உடனடி மறு தேர்வு விடைத்தாள்களின் நகலைப் பெறுவதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.20ம் ஒவ்வொருபாடத்துக்கும் கட்டணமாக ரூ.55ம் செலுத்த வேண்டும்.
அதே போல் மறு கூட்டல் செய்ய விரும்பும் மாணவ-மாணவிகள் ஒரு பாடத்திற்கு ரூ.130ம் இரு பாடங்களுக்குரூ.205ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பங்களைப் பதிவு அஞ்சல் மூலமாக இணை இயக்குனர் (மேல்நிலை), அரசுத் தேர்வுகள் இயக்ககம்,கல்லூரி சாலை, சென்னை 600 006 என்ற முகவரிக்கு வரும் 22ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
உடனடி மறு தேர்வில் தோல்வியடைந்தவர்கள் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் தனித் தேர்வுக்குவிண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார் பழனிவேலு.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications