ஸ்டாலின் பதவி பறிப்பு சட்டம்: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
சென்னை:
தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஒருவருக்கு ஒரு பதவி சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றுகோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
சென்னை மேயராக இருந்த மு.க. ஸ்டாலினின் பதவியைப் பறிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்தச்சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் அவரே மேயராக நீடிக்க வேண்டும் என்றும்உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் உதயகுமார் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை மேயர் பதவி காலியாக இருப்பதாகக் கருத வேண்டும் என்றும் விசாரணை முடியும் வரை அந்தப்பதவிக்குத் தேர்தல் நடத்தக் கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஸ்டாலின் மேயராகத்தொடர வேண்டும் என்ற கோரிக்கையையும் இந்த நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்தும் வழக்கறிஞர் உதயகுமார் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
நீதிபதி ஜி.பி. பட்நாயக் மற்றும் நீதிபதி ரூமாபால் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் நேற்று இம்மனுவைவிசாரித்தது. வழக்கறிஞர் உதயகுமாரின் அனைத்துக் கோரிக்கைகளையும் இந்த பெஞ்ச் நிராகரித்து விட்டது.
ஆனாலும் தமிழக அரசின் புதிய சட்டத்தை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம்எவ்வளவு விரைவாக விசாரிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications