கும்பகோணம் விஷ்ணு கோவில் மூல விக்கிரகம் சேதமா?
கும்பகோணம்:
கும்பகோணத்தில் உள்ள 108 வைணவத் தலங்களில் ஒன்றான சாரங்கபாணி திருக் கோவிலின் மூல விக்கிரகம்சேதம் அடைந்திருப்பதாகத் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புகழ்பெற்ற இந்த சாரங்கபாணி திருக்கோவிலில் பாம்பின் மேல் வீற்றிருப்பது போல சுவாமி சிலை அமைந்துள்ளது.
கருவறைக்குள் அமைந்துள்ள இந்த விக்கிரகத்தின் அருகே செல்ல அந்தக் கோவிலின் பூசாரிகளால் மட்டுமேமுடியும். அவர்கள் அதன் அருகில் சென்று தான் சுவாமிக்கு பூஜை நடத்துவார்கள்.
இந்த மூல விக்கிரகத்தில் பள்ளம் ஏற்பட்டு கடும் சேதம் அடைந்து விட்டதாகத் திடீரென்று ஒரு செய்திவெளியானது.
இதையடுத்து இந்த விஷயம் காட்டுத் தீ போல் அப்பகுதி முழுவதும் பரவியது.
இதையடுத்து அந்தக் கோவிலின் அதிகாரி இது குறித்து விளக்கமளித்தார். கோவில் விக்கிரகத்தில் எந்த சேதமும்ஏற்பட்டிருக்கவில்லை. அதன் கழுத்துப் பகுதியில் லேசான கீறல் மட்டுமே ஏற்பட்டுள்ளது என்று அந்த அதிகாரிகூறினார்.
மேலும் இது குறித்து தமிழக அறநிலையத் துறைக்கு விளக்கமாகக் கடிதம் எழுதப் போவதாகவும் அந்த அதிகாரிகூறினார்.












Click it and Unblock the Notifications