வந்தா குதிச்சுருவேன்... 135 அடி உயரத்தில் ஒரு சேட்டை
புதுக்கோட்டை:
வீட்டில் செலவுக்குப் பணம் தராததால் கோபித்துக் கொண்டு 135 அடி உயர தொலைபேசி கோபுரத்தில் ஏறிய அங்கிருந்து குதித்துத்தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டினார் ஒரு வாலிபர். இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை சந்தைப்பேட்டையைச் சேர்ந்த தனலட்சுமி என்பரின் மகன் வெங்கடேஷ். 20 வயதான இவர் படித்துவிட்டுவேலையில்லாமல் இருக்கிறார். இதனால் வீட்டில் அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு தொல்லை செய்து வந்தார்.
இன்று காலை தனது தாயாரிடம் ரூ. 10,000 கேட்டார். ஆனால், பணம் தர தாயார் மறுத்துவிட்டார்.
இதையடுத்து கோபமடைந்த வெங்கடேஷ் அருகில் உள்ள தொலைபேசி டவருக்கு சென்றார். காலை 7 மணிக்கு 135 அடிஉயரமுள்ள அந்தக் கோபுரத்தின் உச்சியில் ஏறிய வெங்கடேஷ் அங்கிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகமேலே இருந்து கத்தினார்.
இதையடுத்து அப் பகுதி மக்கள் அங்கு குவிந்தனர். அவரை கீழே இறங்கச் சொல்லி அவரது தாயார் கீழே நின்று அழுதார். ஆனால்,பலன் ஏற்படவில்லை. அவருடன் படித்தவர்கள், நண்பர்கள், தெரு மக்கள், உறவினர்கள் என அனைவரும் கூடி நின்று அவரைகீழே இறங்குமாறு கூறினர்.
சிலர் மேலே ஏறிச் செல்ல முயன்றனர். ஆனால், யாராவது மேலே வந்தால் கீழே குதித்துவிடுவேன் என வெங்கடேஷ் மிரட்டியதால்ஏறியவர்கள் வேகமாக கீழே இறங்கிவிட்டனர்.
இந்தத் தகவல் அறிந்து தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்தனர். போலீசாரும் கீழிருந்து மைக் மூலம் வெங்கடேசுடன் பேசிசமாதானப்படுத்த முயன்றும் பலன் உண்டாகவில்லை.
இது குறித்துக் கேள்விப்பட்ட புதுக்கோட்டையின் பிற பகுதி மக்களும் ஆயிரக்கணக்கில் அங்கு குவிந்தனர். வாகனங்களிலும்பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வந்தனர். இதனால் பெரும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
கடும் வெயிலில் உச்சியில் நின்றிருந்த வெங்டேசுக்கு திடீரென தாகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் குடிக்கத் தண்ணீர் கேட்டார்.உடனே ஒரு வாட்டசாட்டமான வாலிபரைத் தேர்ந்தெடுத்த போலீசார் தண்ணீர் கொடுப்பது மாதிரி சென்று வெங்கடேசை பிடித்துக்கொள்ளுமாறு கூறினர்.
அதே போல அந்த வாலிபர் மேலே சென்று வெங்கடேசைக் கட்டிப் பிடித்துக் கொண்டார். உடனே மேலே ஏறிய தீயணைப்புப்படையினர் வெங்கடேசை அமுக்கிப் பிடித்து கீழே கொண்டு வந்தனர்.
அப்போது மணி 11. கிட்டத்தட்ட 4 மணி நேரம் டெலிபோன் டவரில் நின்று ஊரையே கலங்கடித்துவிட்டார் வெங்கடேஷ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications