வைகோவை உடனே விடுதலை செய்ய வேண்டும்: முலாயம் சிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்ட விவகாரம் இன்றும் நாடாளுமன்றத்தில் வெடித்தது.

நேற்று இந்த விவகாரத்தைக் கிளப்பிய சமாஜ்வாடிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் இன்றும் அவை கூடிய உடன்வைகோ கைது குறித்து பேச வேண்டும் என்றார்.

ஆனால், கேள்வி நேரத்தில் இந்தப் பிரச்சனையை பேச அனுமதிக்க முடியாது என்ற சபாநாயகர் பின்னர் இந்த விவகாரம் குறித்துப்பேசலாம் என்றார்.

கேள்வி நேரம் முடிந்தவுடன், இந்த அவையைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார். இப்போது அது குறித்துவிவாதிக்கலாம் என்று சபாநாயகர் அறிவிக்க, மீண்டும் எழுந்தார் முலாயம் சிங்.

ஆட்சி போனால் ஜெ. கைதாகலாம்...

அவர் பேசுகையில், வைகோவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பொடா சட்டத்தை அம் மாநில முதல்வர் ஜெயலலிதாமிகக் கொடிய வகையில் பயன்படுத்தியுள்ளார். இதே வேலையைத் தான் முன்பு பிரதமராக இருந்த இந்திரா காந்தி செய்தார்.எமர்ஜென்சியைக் கொண்டு வந்து எதிர்க் கட்சிகளை ஒடுக்கப் பார்த்தார். அதன் விளைவை இந்திரா காந்தி அனுபவித்தார்.

காங்கிரஸ் இன்னும் கூட அதன் மோசமான விளைவை அனுபவித்து வருகிறது. மிகப் பெரும் பலத்துடன் விளங்கிய இந்திராகாந்தியாலேயே சட்டத்தை தவறாகப் பயன்படுத்திவிட்டு சமாளிக்க முடியவில்லை. எந்த வகையிலும் ஜெயலலிதா, இந்திராவுக்குஇணையானவர் அல்ல. இவர் சட்டத்தை தவறுதலாகப் பயன்படுத்தியிருக்கிறார். அதனால் ஏற்படும் விளைவுகள் மிகமோசமானதாக இருக்கும். நாளை ஜெயலலிதாவின் பதவி பறிபோனால், அவரைக் கூட பொடாவில் கைது செய்ய முடியும்.

பொடா சட்டத்தை ஆதரித்த வைகோவை அதே பொடா சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறார்கள். இதை வன்மையாகக்கண்டிக்கிறோம் என்றார். அக் கட்சியின் இன்னொரு எம்.பியான ரகுநாத் ஜா பேசுகையில், வைகோ எந்தத் தவறும் செய்யவில்லை.அவரை அரசியல் காரணங்களுக்காக கைது செய்திருக்கிறார்கள். உடனே அவரை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

பின்னர் பேசிய மதிமுக எம்.பியான கிருஷ்ணம், இது ஜெயலலிதாவின் அரசியல் பழிவாங்கல். ஒரு மாநில அரசே சட்டத்தைதவறாகப் பயன்படுத்தியுள்ளது. முதலில் அந்தச் சட்டத்தை திருத்த வேண்டும். அத்தோடு மத்திய அரசின் பணி முடிந்துவிடாது.வைகோவை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மார்க்சிஸ்ட் கருத்து:

வைகோவுக்கு ஆதரவாக காங்கிரஸ், அதிமுக தவிர்த்த அனைத்துக் கட்சியினரும் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவைகோவின் திருமங்கலம் பேச்சை ஆதரிக்காவிட்டாலும் அவர் கைதை எதிர்ப்பதாகக் கூறியது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி கூறுகையில், முதலில் பொடா சட்டத்தை மத்திய அரசு உடனே நீக்கவேண்டும். வைகோ கைது செய்யப்பட்டது சரி என்றால் மதிமுக அமைச்சர்களை மத்திய அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும்.பொடா குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தபோது இந்தச் சட்டத்தை ஆதரித்துப் பேசிய வைகோ, பொடாவைஎதிர்ப்பவர்கள் தேச விரோதிகள் என்றார். இப்போது அதே சட்டத்தில் அவர் காைகியிருக்கிறார் என்றார் சாட்டர்ஜி.

கைது சரிதான்- காங்கிரஸ்:

அடுத்துப் பேசிய காங்கிரஸ் எம்.பி. மணிசங்கர் ஐயர், பொடா சட்டத்தை வைகோ மீறியிருக்கிறார். பொதுக் கூட்டத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக அவர் பேசியது குற்றம். சட்டப்படி தான் தமிழக அரசு அவர் மீது நடவடிக்கைஎடுத்துள்ளது. பொடா சட்டத்தை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது. ஆனால், ஒரு தனி மனிதருக்காக இந்தச் சட்டத்தில் மாற்றம்கொண்டு வர காங்கிரஸ் அனுமதிக்காது. இனி நீதிமன்றத்திடம் தான் வைகோ தனது நியாயத்தை எடுத்துச் சொல்ல வேண்டும்என்றார்.

அரசியல் பழிவாங்கல்: பெர்னாண்டஸ் கட்சி

சமதா கட்சியின் எம்.பியான பிரபுநாத் சிங் கூறுகையில், இது ஜெயலலிதாவின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை. வைகோவைவிடுவிக்க மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

வைகோ செய்தது தவறு: அதிமுக

அதிமுக எம்.பியான பாண்டியன் பேசுகையில், இருக்கும் சட்டத்தைத் தான் பயன்படுத்தினோம். பொடா சட்டத்தின் 21 (3)பிரிவின்படி தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதராவாக பொதுக் கூட்டத்தில் பேசுவது சட்ட மீறலாகும். வைகோவை பொடாசட்டத்தில் கைது செய்ததில் எந்தத் தவறும் இல்லை. அவர் நீதிமன்றத்தில் இதை எதிர்க்கட்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+