இலங்கை கடற்படை கைது செய்த 9 தமிழக மீனவர்கள் விடுதலை

Subscribe to Oneindia Tamil

யாழ்ப்பாணம்:

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 9 மீனவர்களை விடுதலை செய்யயாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராமேஸ்வரம் உள்ளிட்ட சில பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்கடலுக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த இலங்கை கடற்படையினர், தங்கள் நாட்டு எல்லைக்குள்மீன் பிடிப்பதாகக் குற்றம் சாட்டி அம்மீனவர்களைக் கைது செய்தனர். இவ்வாறு 9 மீனவர்கள் வரை கைதுசெய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் மீனவர்கள் வழி தவறிச் சென்று விட்டதாகவும் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்என்று இலங்கை அரசிடம் இந்திய அரசும் தமிழக அரசும் கோரிக்கை விடுத்தன.

இதை ஏற்றுக் கொண்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 9 மீனவர்களையும் விடுதலை செய்ய இலங்கை அரசுஉத்தரவிட்டது.

அதன்படி யாழ்ப்பாண நீதிமன்றம் அந்த 9 மீனவர்களையும் விடுதலை செய்ய இலங்கை கடற்படைக்குஉத்தரவிட்டது.

மேலும் அந்த 9 மீனவர்களையும் இந்தியக் கடல் பகுதிக்குச் சென்று இந்தியக் கடற்படையிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் யாழ்ப்பாணம் நீதிமன்றம் இலங்கை கடற்படைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 9 தமிழக மீனவர்களும் விரைவில் நாடு திரும்புவர்என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+