போலீஸ் காவலில் இறந்தவர் உடலை வாங்க ஊர் மக்கள் மறுப்பு: கையை பிசையும் மாவட்ட நிர்வாகம்
திருச்சி:
திருச்சியில் போலீஸ் காவலில் மர்மமான முறையில் இறந்தவரின் உடலை வாங்க அவரது உறவினர்களும் ஊர்க்காரர்களும்மறுத்துவிட்டனர். இதனால், அவரது உடல் தொடர்ந்து மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவத்தால் ஐயம்பாளையத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து அங்கு அதிரடிப்படை போலீசார்குவிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சியையடுத்துள்ள ஐயம்பாளையத்தைச் சேர்ந்த முத்துவேல் என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வந்தார். பலகுடும்பங்களை குடிக்கு அடிமையாக்கி நடுத் தெருவுக்கு கொண்டு வந்த புண்ணியவான் இவர்.
இவர் வருடக்கண்ககில் இந்த வேலையைத் தான் செய்து வருகிறார். ஆனால், கடந்த 8ம் தேதி திடீரென ஞானோதயம் பெற்றமனச்சநல்லூர் காவல் நிலைய போலீசார் இவர் கள்ளசாராயம் காய்ச்சுவதைக் கண்டுபிடித்து கைது செய்தனர். நீதிமன்றஉத்தரவுப்படி 15 நாட்கள் திருச்சி சிறையில் அடைத்தனர்.
அங்கு இவரிடம் விசாரணை நடத்திய போலீசார் இவரைத் தாக்கியதாகத் தெரிகிறது. இதில் இவர் நேற்று காலை இறந்துவிட்டார்.
அவரை போலீசார் தான் அடித்துக் கொலை செய்துவிட்டதாகக் கூறி ஐயம்பாளையத்ச்ை சேர்ந்த மக்களும் இவரது உறவினர்களும்நூற்றுக்கணக்கில் திருச்சி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காவல்துறை உயர் அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தவறு செய்த போலீசார் மீது விசாரணைநடத்துவதாகவும் உறுதியளித்து கூட்டத்தைக் கலைந்து போகச் செய்தனர்.
ஆனால், இன்று பிரதேப் பரிசோதனை முடிந்த முத்துவேலின் உடலை மருத்துவமனை ஊழியர்கள் ஒப்படைத்தபோது அதைவாங்க அவரது உறவினர்கள் மறுத்துவிட்டனர். அவரை அடித்துக் கொன்ற போலீசாரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கைஎடுக்காதவரை உடலைப் பெற மாட்டோம் என அறிவித்துவிட்டனர்.
இதையடுத்து மாவட்ட எஸ்.பி, வருவாய் அதிகாரி, தாசில்தார் ஆகியோர் ஐயம்பாளையத்துக்கு ஓடினர். உடலை வாங்கிக்கொள்ளும்படி கெஞ்சினர். இறந்த முத்துவேலின் மனைவிக்கு அரசு வேலை தருவதாகவும், சம்பவத்தில் தொடர்புடைய போலீசார்மீது விசாரணை நடத்துவதாகவும் உறுதியளித்தனர்.
ஆனால், முதலில் அந்த போலீசாரை சஸ்பெண்ட் செய்தால் மட்டுமே உடலைப் பெறுவோம் என அந்த ஊர் மக்கள்அறிவித்துவிட்டனர். இதனால், அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. அந்த ஊர் மக்களிடம் பேசி பலன் ஏற்படதாதால் அதிரடிப்படை போலீசாரை கொண்டு போய் இறக்கி மிரட்டிப் பார்த்தனர்.
அந்தப் படையினர் கூடி நின்றிருந்த மக்கள் மீது தடியடி நடத்தியதால் பதற்றம் மேலும் அதிகரித்தது. இதையடுத்து என்ன செய்வதுஎன்று தெரியாமல் குழம்பிப் போய் இருக்கிறது மாவட்ட நிர்வாகம்.
அப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications