சென்னையில் தொடர் கொள்ளைகளை தடுக்க ரோந்து செல்லும் "வீர இளைஞர்கள்"
சென்னை:
சென்னையில் நடந்து வரும் தொடர் கொள்ளைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக தற்போது அந்த அந்தப்பகுதிகளைச் சேர்ந்த சில இளைஞர்களே இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாட்டசாட்டமாகக் காட்சியளிக்கும் இந்த இளைஞர்களுக்கு சென்னை போலீசாரே பயிற்சி அளித்துள்ளனர்.
கடந்த ஐந்து மாதங்களாகவே சென்னையில் தொடர்ந்து கொள்ளைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இரவுநேரங்களில் வீடுகளின் கதவு அல்லது ஜன்னலை உடைத்து பணம் நகைகள் கொள்ளையடிக்கப்படுவது சர்வசாதாரணமாக நடந்து வருகிறது.
இரவு நேரங்களில் போலீசார் ரோந்து சென்று கொண்டிருக்கும் போதிலும் எப்படியாவது இந்தக் கொள்ளைச்சம்பவங்கள் நடந்து விடுகின்றன.
இதையடுத்து அந்த அந்தப் பகுதிகளைச் சேர்ந்த சில இளைஞர்களே இரவு ரோந்துப் பணியில் ஈடுபடலாம் என்றுமுடிவு செய்யப்பட்டது.
அந்தப் பகுதிகளைச் சேர்ந்த சில குற்றவாளிகளை இந்த இளைஞர்கள் தெரிந்து வைத்திருப்பதால் கொள்ளைச்சம்பவங்களை எளிதில் தவிர்த்து விடலாம் என்று போலீசாரும் நம்பினர்.
இதையடுத்து முதற்கட்ட நடவடிக்கையாக சென்னை-பூக்கடை பகுதியில் 20க்கும் மேற்பட்ட வாட்டசாட்டமானஇளைஞர்களைப் போலீசார் தேர்ந்தெடுத்தனர்.
கடந்த சில நாட்களாக அந்த இளைஞர்களுக்குப் போலீசார் தீவிரமான பயிற்சிகளை அளித்தனர். அதன் பிறகுசமீபத்தில் அந்த இளைஞர்கள் பூக்கடை பகுதியில் இரவு முழுவதும் வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்து ரோந்துசெல்லும் பணியைத் துவங்கினர்.
இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரை இந்த வீர இளைஞர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர்.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் சீருடையும் மாதம் ரூ.1,500 சம்பளமும் அளிக்கப்படுகின்றன. இதற்கான செலவைசில நலச் சங்கங்கள் ஏற்றுள்ளன.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications