முலாயம் சிங்குக்கு நன்றி தெரிவித்து வைகோ தந்தி
சென்னை:
தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்த 13 அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துமதிமுக பொதுச் செயலாளரான வைகோ இன்று தந்தி அனுப்பியுள்ளார்.
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வைகோவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றுசமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மிகத் தீவிரமாக குரல் கொடுத்தார். அதே போல இந்தியகம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி, சமதா கட்சியின் எம்.பிக்கள், பாட்டாளி மக்கள் கட்சி எம்.பிக்கள்ஆகியோர் நாடாளுமன்றத்தில் வைகோவை விடுவிக்கக் கோரி பேசினர்.
இவர்களைத் தவிர வேறு சில கட்சிகளைச் சேர்ந்தவர்களும் வைகோ கைதைக் கண்டித்துப் பேசினர்.
தன்னை ஆதரித்துப் பேசிய கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து வைகோ இன்று தந்திகளைஅனுப்பியுள்ளார்.
வைகோ சார்பாக மதிமுக தலைமை அலுவலகமான "தாயகம்" மூலம் இந்தத் தந்திகள் அனுப்பப்பட்டன.
நோயாளி கைதிகளுக்கு உதவிய வைகோ:
இதற்கிடையே வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோ தன்னுடன் உள்ள நோயாளி கைதிகளிடம் மிகவும்பரிவுடன் நடந்து கொண்டார்.
மதிமுக பிரமுகர்களும் தொண்டர்களும் சிறைக்குச் சென்று தரும் பழங்கள் மற்றும் பிஸ்கட்டுகளைப் பெற்றுக்கொண்ட வைகோ அங்குள்ள நோயாளிகளுக்கு அவற்றைக் கொடுக்குமாறு கூறி சிறை அதிகாரிகளிடம்ஒப்படைத்து விட்டார்.
மேலும் சிறையில் தரும் சாப்பாடையே தான் விரும்புவதாகவும் தனக்காக வீட்டிலிருந்தோ வெளியிலிருந்தோசாப்பாடு வாங்கிக் கொண்டு வர வேண்டாம் என்றும் தன்னைப் பார்க்க வருபவர்களிடம் வைகோ தெளிவாகக் கூறிவருகிறார்.
மேலும் 4 மதிமுகவினர் மீது வழக்கு:
இந்நிலையில் வைகோ கைது செய்யப்பட்டதைக் கண்டித்து விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளைபிரபாகரனின் படங்களுடன் மதுரையில் மறியல் செய்த 4 பேரை சமீபத்தில் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அந்த 4 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்பின் தலைவர் படத்தை வைத்துக் கொண்டு அவர்கள் மறியல் செய்ததால்,அந்த 4 மதிமுகவினர் மீதும் விரைவில் புதிய வழக்குகளைப் பதிவு செய்ய போலீசார் முயற்சித்து வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications