ஜெயலலிதாவை பெர்னாண்டஸ் சந்திக்காதது ஏன்?
வேலூர்:
வேலூர் சிறையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைச் சந்தித்த பாதுகாப்பு அமைச்சர் பெர்னாண்டஸ் பின்னர் முதல்வர்ஜெயலலிதாவுடனான சந்திப்பை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார்.
நேற்று வைகோவை சந்தித்த பின் மாலை 4 மணிக்கு முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தார் பெர்னாண்டஸ்.இதையடுத்து அவரை கோட்டையில் சந்திக்க ஜெயலலிதா திட்டமிட்டுருந்தார். அப்போது வைகோவை விடுவிக்கக் கோரிஜெயலலிதாவிடம் பேசவும் திட்டமிட்டியிருந்தார்.
ஆனால், ஜெயலலிதாவிடம் எந்த உதவியும் கேட்க வேண்டாம் என பெர்னாண்டசிடம் வைகோ கூறிவிட்டதாகத் தெரிகிறது.இதனால், ஜெயலலிதாவுடனான சந்திப்பை பெர்னாண்டஸ் ரத்து செய்தார்.
தன்னை பிரதமர் உடனடியாக டெல்லிக்கு வரச் சொல்லி உத்தரவிட்டுள்ளதால், ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை எனபெர்னாண்டஸ் கூறினார். ஆனால், மாலை 6 மணி வரை சென்னை ராணுவ பயிற்சி மையத்தில் தான் இருந்தார். அதன் பின்னர் தான்டெல்லிக்குத் திரும்பினார். ஜெயலலிதாவுடன் சந்திப்பை ரத்து செய்த அவர் திமுக தலைவர் கருணாநிதியுடனான சந்திப்பையும்தவிர்த்துவிட்டார்.
பெர்னாண்டஸ் சிறப்பு விமானத்தில் டெல்லியில் இருந்து சென்னை வந்தார். பின்னர் அதே விமானததிலேயே டெல்லி திரும்பினார்.அவருக்குப் பாதுகாப்பான 500 போலீசார் சென்னையில் இருந்து வேலூர் வந்தனர்.












Click it and Unblock the Notifications