குஜராத்: பா.ஜ.க- தேர்தல் கமிஷன் மோதல்

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்:

குஜராத்தில் உடனடியாகத் தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் தயாராக இல்லை என்று தெரிகிறது. இதனால் பா.ஜ.க.- தேர்தல்கமிஷன் இடையே மோதல் நடக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமலாக்க வேண்டும் என எதிர்க் கட்சிகள் கோரி வருகின்றன. அங்கு உடனே தேர்தல்நடத்தக் கூடாது என தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசமும் கூறியுள்ளது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை இந்தச் சட்ட மன்றத்தின் ஆயுட்காலம் இருந்தாலும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டுசட்டசபையையும் கலைத்துள்ளார் முதல்வர் நரேந்திர மோடி.

அங்கு நடந்த மதக் கலவரங்களால் பா.ஜ.கவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் உடனடியாகத் தேர்தல் நடத்த பா.ஜ.க.தலைமையும் மோடியும் முடிவு செய்து சட்டசபையை கலைத்துள்ளனர்.

ஆனால், இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால், பா.ஜ.கவின் கோரிக்கையைஏற்று உடனடியாகத் தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் தயாராக இல்லை என்று தெரிகிறது.

நேற்று தன்னைச் சந்தித்து விரைவில் தேர்தல் நடத்தக் கோரிய பா.ஜ.க. தேசியச் செயலாளரிடம் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரிலிங்டோ, தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்பதை கமிஷன் தான் முடிவு செய்யும். இதில் யாருடைய நெருக்குதலுக்கும்கமிஷன் பணியாது என்று கூறிவிட்டதாகத் தெரிகிறது.

இத் தகவலை முன்னாள் பிரதமர் குஜ்ரால் தெரிவித்தார். பல சமூக நல அமைப்பினருடன் தேர்தல் கமிஷன் அதிகாரிகளைச் சந்தித்தகுஜ்ரால், இப்போது மதரீதியில் பிளவுபட்டு பிளவுபட்டுக் கிடக்கும் குஜராத்தில் தேர்தல் நடத்தக்கூடாது என்று கோரிக்கைவிடுத்தார். அவரிடம் பேசிய லிங்டோ, தேர்தலை விரைவில் நடத்தக் கோரி யாரும் எங்களை நெருக்க முடியாது என்றுதெரிவித்தார்.

இந் நிலையில் தனது ஆட்சியில் நடந்த தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்டு குஜராத் முதல்வர் மோடி ஒரு அறிக்கைவெளியிட்டுள்ளார். அதில், வன்முறை என்ற பெயரில் குஜராத்தின் பெருமையைக் குலைக்க முயற்சி நடந்தது. குஜராத்தின்ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க முயற்சி நடந்தது.

குஜராத்தின் பெருமையையும் கெளரவத்தையும் நிலை நாட்ட மக்கள் தீர்ப்பை பெறுவது தான் ஒரே வழி. இதனால் தான் இந்தத்தேர்தலை நடத்துகிறோம். எனது ஆட்சியில் தவறு நடந்திருந்தால் மக்கள் மன்னிக்க வேண்டும் என்று அதில் மோடி கூறியுள்ளார்.

தெலுங்கு தேசம் எதிர்ப்பு:

இந் நிலையில் அங்கு உடனே தேர்தல் நடத்தக் கூடாது என தெலுங்கு தேசம் கட்சி கூறியுள்ளது. அக் கட்சியின் தலைவரான எர்ரன்நாயுடு கூறுகையில், குஜராத்தில் தொடர்ந்து கலவரம் நடந்து கொண்டுள்ளது. மக்கள் இன்னும் முகாம்களில் வசித்து வருகின்றனர்.மாநில அரசால் நிலைமையை இன்னும் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. பிறகு எப்படி அங்கு தேர்தல் நடத்த முடியும்?என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+